Home
Mobile

அமேசான் அதிர போகுது.. ரூ.10699 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது 7000mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 24 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,199 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.10699 விலையில் வாங்கிவிட முடியும்.

அமேசான் அதிர போகுது.. ரூ.10699 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?

போக்கோ எம்7 பிளஸ் 5ஜி அம்சங்கள் (Poco M7 Plus 5G specifications): 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3 protection) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 15 (Android 15) சார்ந்த ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) ஆதரவுகளுடன் இந்த புதிய போக்கோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 6என்எம் 5 எஸ்ஒசி சிப்செட் (Qualcomm Snapdragon 6s Gen 3 6nm 5G SoC) வசதியுடன் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டை கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன்.

குறிப்பாக 50எம்பி பிரைமரி கேமரா + செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

அதேபோல் 7000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது போக்கோ எம்7 பிளஸ் 5ஜி. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33Wஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 18W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. குரோம் சில்வர் (Chrome Silver), அக்வா ப்ளூ (Aqua Blue) மற்றும் கார்பன் பிளாக் (Carbon Black) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

அதுவும் IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) ஆதரவு கொண்டுள்ளது இந்த போக்கோ போன். மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் + க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அதேபோல் இந்த போனின் எடை 217 கிராம் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO M7 Plus 5G with 4GB RAM price droped on Amazon: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X