ஆகஸ்ட் 13 உறுதி.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. இந்தியாவுக்கு வரும் புது Poco 5ஜி போன்.. எந்த மாடல்?
ஆகஸ்ட் 13-ம் தேதி இந்தியாவில் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி (POCO M7 Plus 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது போக்கோ நிறுவனம். குறிப்பாக இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த புதிய போக்கோ போனின் விலை மற்றும் அம்சங்கள் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
போக்கோ எம்7 பிளஸ் 5ஜி அம்சங்கள் (Poco M7 Plus Specifications): ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 6s Gen 3 chipset) உடன் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளது.
குறிப்பாக 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போக்கோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போக்கோ போனில் உள்ளது.
அதுவும் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor)ஆதரவும் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.

மேலும் 7000mAh பேட்டரி உடன் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போக்கோ எம்7 பிளஸ் 5ஜி போனில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.15,000 பட்ஜெட்டில் இந்த புதிய போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








