செம ஆஃபர் விலையில் கிடைக்கும் போக்கோ 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றம் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்7 பிளஸ் 5ஜி (POCO M7 Plus 5G) ஸ்மார்ட்போன் மாடலுக்கு 20 சதவீதம் தள்ளுபடி ரூ.13,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

போக்கோ எம்7 பிளஸ் 5ஜி அம்சங்கள் (Poco M7 Plus 5G specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 6என்எம் 5 எஸ்ஒசி சிப்செட் (Qualcomm Snapdragon 6s Gen 3 6nm 5G SoC) வசதியுடன் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலுஅட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டை கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன்.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்டுள்ளது போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் 1 டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போக்கோ போனில் உள்ளது.
குறிப்பாக ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) ஆதரவுகளுடன் இந்த புதிய போக்கோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதுவும் 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3 protection) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளது.
போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

அதேபோல் IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ போன். மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் + க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அதேபோல் இந்த போனின் எடை 217 கிராம் ஆகும்.
போக்கோ எம்7 பிளஸ் 5ஜி 7000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33Wஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 18W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. குரோம் சில்வர் (Chrome Silver), அக்வா ப்ளூ (Aqua Blue) மற்றும் கார்பன் பிளாக் (Carbon Black) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications