கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.12999 போதும்.. 7000mAh பேட்டரி.. 50MP கேமரா.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?
போக்கோ நிறுவனம் இந்தியாவில் புதிய போக்கோ எம்7 பிளஸ் 5ஜி (Poco M7 Plus 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 7000எம்ஏஎச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் சிப்செட், 6.9-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. இப்போது போக்கோ எம்7 பிளஸ் 5ஜி போனின் விலை, விற்பனை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
போக்கோ எம்7 பிளஸ் 5ஜி அம்சங்கள் (Poco M7 Plus 5G specifications): 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்இ 550 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்இ கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3 protection) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 6என்எம் 5 எஸ்ஒசி சிப்செட் (Qualcomm Snapdragon 6s Gen 3 6nm 5G SoC) வசதியுடன் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டை கொண்டுள்ளது இந்த அட்டகாசமா போக்கோ ஸ்மார்ட்போன்.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் 1 டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போக்கோ போனில் உள்ளது.

ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) ஆதரவுகளுடன் இந்த புதிய போக்கோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ போன். மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் + க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அதேபோல் இந்த போனின் எடை 217 கிராம் ஆகும்.

7000mAh பேட்டரி உடன் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33Wஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 18W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. குரோம் சில்வர் (Chrome Silver), அக்வா ப்ளூ (Aqua Blue) மற்றும் கார்பன் பிளாக் (Carbon Black) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்7 பிளஸ் 5ஜி போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. பினபு இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.14,999-ஆக உள்ளது. வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் இந்த போனை வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.12,999 விலையில் வாங்கிவிட முடியும்.


Click it and Unblock the Notifications








