Home
Mobile

அடிச்சு புடிச்சு ஆர்டர்.. வெறும் ரூ.9,499 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 5160mAh பேட்டரி.. எந்த மாடல்?

போக்கோ பிரியர்களை பட்ஜெட்டில் தட்டித் தூக்கும்படி 12 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா, 5160mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் வெளியான போக்கோ எம்7 5ஜி (POCO M7 5G) விற்பனையானது பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தொடங்கிவிட்டது. ஆரம்பமே சலுகையில் வந்துள்ளதால், அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படி விற்பனை சூடுபிடித்துள்ளது. இந்த போக்கோ எம்7 5ஜி போனின் விலை விவரங்களை பார்த்துவிட்டு, பீச்சர்கள் எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.

போக்கோ எம்7 5ஜி பிளிப்கார்ட் விற்பனை (POCO M7 5G Flipkart Sale): இந்த போக்கோ போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் மார்கெட் விலை ரூ.10,499ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் மார்கெட் விலை ரூ.11,499ஆகவும் இருக்கிறது. அறிமுக சலுகை போக 6 ஜிபி மாடல் ரூ.9,999 பட்ஜெட்டிலும், 8 ஜிபி மாடல் ரூ.10,499 பட்ஜெட்டிலும் வருகிறது.

அடிச்சு புடிச்சு ஆர்டர்.. வெறும் ரூ.9,499 பட்ஜெட்ல 12GB ரேம்.. மாடல்?

இந்த விலையில் ரூ.500 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் மாடலை வெறும் ரூ.9,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த 6 ஜிபி ரேம் மாடலில் கூடுதலாக 6 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது. அதேபோல இந்த பட்ஜெட் செக்மெண்டில் பெரிய டிஸ்பிளே கொண்ட மாடலாக இருக்கிறது.

போக்கோ எம்7 5ஜி அம்சங்கள் (POCO M7 5G Specifications): இந்த போக்கோ போனில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.88 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுவொரு ஐ-சேப் டிஸ்பிளே (Eye-safe Display) மாடலாக இருக்கிறது.

128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல் 1 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) சப்போர்ட் கிடைக்கிறது. 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்கிரேடுகள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களுடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) வருகிறது.

இந்த ரூ.9,999 பட்ஜெட்டிலும் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. இருப்பினும், குவாட் கேமரா பம்ப் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த போக்கோவில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

இந்த போக்கோ எம்7 5ஜி போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5160mAh பேட்டரி வருகிறது. பட்ஜெட் மாடலாக இருப்பதால் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடையாது. இருப்பினும், IP52 டஸ்ட் & ஃபிளாஷ் ரெசிஸ்டன்ட் பேக் செய்துள்ளது. இந்த போக்கோவில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது.

மேலும், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது. இந்த போக்கோ எம்7 5ஜி போனை மூன்று கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆகவே, கஸ்டமர்களுக்கு சாடின் பிளாக் (Satin Black), ஓசன் ப்ளூ (Ocean Blue) மற்றும் மின்ட் கிரீன் (Mint Green) கலர்களில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO M7 5G With 50MP Camera Sale Under Rs 10000 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X