SALE வெளுக்க போகுது.. ரூ.9,999 போதும்.. 12GB ரேம்.. 50MP கேமரா.. 5160mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை வெளுத்து கட்ட போகுது என்று சொல்லும்படி வெறும் ரூ.9,999 பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 50 எம்பி மெயின் கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5160mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் போக்கோ எம்7 5ஜி (POCO M7 5G) வெளியாகி இருக்கிறது. 2 ஓஎஸ் அப்டேட்டையும், 4 வருட செக்யூரிட்டி அட்டேட்டையும் கொடுக்கும் இந்த போக்கோ எம்7 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
போக்கோ எம்7 5ஜி அம்சங்கள் (POCO M7 5G Specifications): இந்த போக்கோ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடையாது, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) கிடைக்கிறது. இருப்பினும், 2 ஓஎஸ் அப்டேட்கள் கிடைப்பதால், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் வரையில் பெற்று கொள்ளலாம். 4 வருட செக்யூரிட்டி அட்டேட் உள்ளது.

அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Octa Core 4nm Snapdragon 4 Gen 2) சிப்செட் கிடைக்கிறது. ஆகவே, இந்த ரூ.9,999 பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். இந்த போக்கோவில் 6.88 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCS) டிஸ்பிளே எச்டிபிளஸ் (HD+) ரெசொலூனுடன் வருகிறது.
மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஃபிளிக்கர் ஃப்ரீ (Flicker Free) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் டிசி டிம்மிங் (DC Dimming) கிடைக்கிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) சப்போர்ட் கொண்ட 2 வேரியண்ட்கள் கிடைக்கின்றன. ஆகவே, 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கிடைக்கிறது.
மேலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது. இந்த போக்கோ எம்7 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த பட்ஜெட்டிலும் 5160mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த 5160mAh பேட்டரி உடன் 8.22 எம்எம் தடிமன் மற்றும் 205.39 கிராம் எடை கொடுக்கிறது.
IP52 டஸ்ட் & ஃபிளாஷ் ரெசிஸ்டன்ட் மற்றும் பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர் (Bottom-firing Speaker) கிடைக்கிறது. இந்த போக்கோ போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சப்போர்ட் கிடைக்கிறது. இப்போது விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.
இந்த போக்கோ எம்7 5ஜி போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.10,499ஆக இருக்கிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.11,499ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் மார்ச் 7ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. அறிமுக சலுகையில் ரூ.1000 டிஸ்கவுண்ட் வருகிறது. ஆகவே, ரூ.9,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications