Home
Mobile

போட்டான் பாரு POCO.. சருக்குனு ரூ.9000 பட்ஜெட்டுக்கு இறங்கிய முரட்டு 5ஜி போன்.. ஜன.8 புது மாடல் வருதுல அதான்!

போக்கோ (POCO) நிறுவனம், அதன் புதிய பட்ஜெட்-விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அது போக்கோ எம்8 5ஜி (POCO M8 5G) ஸ்மார்ட்போன் ஆகும். இது 2026 ஜனவரி 8 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வரவிருக்கும் புதிய போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி ஏஐ கேமரா செட்டப், 7.35 மிமீ ஸ்லிம் டிசைன், ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் (Snapdragon 6 Gen 3 ) மற்றும் 5520mAh பேட்டரி ஆகிய முக்கிய அம்சங்கள் உறுதி செய்யப்ப்பட்டு உள்ளன.

POCO.. சருக்குனு ரூ.9000 பட்ஜெட்டுக்கு இறங்கிய முரட்டு 5ஜி போன்!

இதற்கிடையில் - புதிய மாடலின் (போக்கோ எம்8 5ஜி) அறிமுக தேதி உறுதி செய்யப்பட்ட வேகத்தில், முன்னதாக அறிமுகமான போக்கோ எம்75ஜி (POCO M7 5G) ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சுவாரஸ்யமாக அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் ஆகிய 2 இகாமர்ஸ் தளங்களுமே போக்கோ எம்7 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை குறைந்துள்ளன.

அமேசான் இந்தியாவில் போக்கோ எம்7 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.9,299 க்கு வாங்க கிடைக்கிறது. மறுகையில் உள்ள பிளிப்கார்ட் வலைத்தளத்தில் இதே ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,599 க்கு வாங்க கிடைக்கிறது.

நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் அறிமுகமான நேரத்தில் போக்கோ எம்7 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9999 க்கு வாங்க கிடைத்தது. ஆக அமேசான் இந்தியா ரூ.700 விலை குறைப்பையும், பிளிப்கார்ட் ஆனது ரூ.400 விலை குறைப்பையும் வழங்குகிறது.

போக்கோ எம்7 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் TÜV Rheinland Low Blue Light, Flicker Free and Circadian சான்றிதழ்கள் உடனான 6.88-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50-மெகாபிக்சல் சோனி IMX852 பிரைமரி கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை போக்கோ எம்7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 18W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5,160mAh பேட்டரியை கொண்டுள்ளது. இருப்பினும்பாக்சில் 33W சார்ஜருடன் வருகிறது.

போக்கோ எம்8 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது FHD+ ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். பேக் பேனலில் 50 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் முன்பக்கத்தில் 20 எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம். இது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப் உடன் வரலாம் மற்றும் 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,520mAh பேட்டரியை பேக் செய்யலாம்.

போக்கோ எம்8 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? போக்கோ எம்8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 1.5 கே ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான சற்றே "உயரமான" 6.88 இன்ச் OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை போக்கோ எம்8 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் 50 எம்பி + 8 எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப்பையும், முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமராவையும் கொண்டிருக்கலாம். சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 உடன் வரலாம். பேட்டரியை பொறுத்தவரை இது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் ஒரு பெரிய 6,500mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.

என்ன விலைக்கு வரலாம்? போக்கோ எம்8 சீரீஸின் ப்ரோ மாடல் ஆன போக்கோ எம்8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,000 - ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் (ரூ.17,990) அறிமுகம் செய்யப்படலாம். மறுகையில் உள்ள வெண்ணிலா வேரியண்ட் ஆன போக்கோ எம்8 ஆனது ரூ.10,000 - ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் (ரூ.14,990) அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO M7 5G Price Dropped Ahead POCO M8 5G India Launch Confirmed in January 8
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X