மார்ச் 3 வரை எந்த போனும் வாங்காதீங்க.. கம்மி விலை.. இந்தியாவுக்கு வருகிறது புதிய POCO 5ஜி போன்.. எந்த மாடல்?
போக்கோ (POCO) நிறுவனம் தனது புதிய போக்கோ எம்7 5ஜி (POCO M7 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் மார்ச் 3-ம் தேதி இந்தியாவில் இந்த புதிய போக்கோ போன் அறிமுகமாகும். அதவும் கம்மி விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பாரப்புகைள உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் சில அம்சங்களைப் பார்க்கலாம்
போக்கோ எம்7 5ஜி அம்சங்கள் (POCO M7 5G Specifications): தரமான ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 chipset) வசதியுடன் இந்த போக்கோ எம்7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

அதேபோல் 6.88-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் போக்கோ எம்7 5ஜி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் போன்ற அம்சங்கள் உள்ளன. மேலும் 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, 5000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போக்கோ எம்7 5ஜி போன் வெளிவரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது போக்கோ எம்7 5ஜி போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளிவரும். மேலும் ஏற்கனவே வெளியான போக்கோ எம்7 ப்ரோ 5ஜி (POCO M7 Pro 5G) போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
போக்கோ எம்7 ப்ரோ 5ஜி அம்சங்கள் (POCO M7 Pro 5G Specifications): ஆக்டோ கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா (Octa Core 6nm MediaTek Dimensity 7025 Ultra) சிப்செட் உடன் இந்த அசத்தலான போக்கோ எம்7 ப்ரோ 5ஜி போன் வெளிவந்துள்ளது. சியோமி ஹைப்பர் ஓஎஸ் (Xiaomi Hyper OS) மற்றும் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது.
6.67 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED) கொண்டுள்ளது இந்த போக்கோ போன். மேலும் இந்த டிஸ்பிளவில் 11080 × 2400 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் 2160Hz டிம்மிங் ஃபிரிகொன்சி, கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
சக்திவாய்ந்த ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டு வெளிவந்துள்ளது இந்த போக்கோ எம்7 ப்ரோ 5ஜி மாடல். மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
அதேபோல் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் சிஸ்டம் (Dual Rear System) கொண்டுள்ளது இந்த போக்கோ எம்7 ப்ரோ 5ஜி போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேற கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5110mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் போக்கோ எம்7 ப்ரோ 5ஜி வெளிவந்துள்ளது. மேலும் டஸ்ட் (Lunar Dust), லாவண்டர் ப்ரோஸ்ட் (Lavender Frost) மற்றும் ஆலிவ் ட்விலைட் (Olive Twilight) நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கிறது.
டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் (Hi Res) போன்ற ஆடியோ அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சாரும் (Infrared Sensor) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன. தற்போது பிளிப்கார்ட் தளத்தில் போக்கோ எம்7 ப்ரோ 5ஜி ஆனது ரூ.13,999 விலையில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








