Home
Mobile

ஆர்டர் பிச்சிக்குது.. ரூ.8,849 ஆஃபர் விலைக்கு POCO 5ஜி போன்.. 5160mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

போகோ (POCO) நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு இந்திய மார்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. டிசைன் மற்றும் பீச்சர்களும் பட்ஜெட்டை விட கூடுதலாக கிடைப்பதால் விற்பனையிலும் தனியிடம் பிடித்துள்ளது. இப்போது, 5160mAh பேட்டரி, 50 எம்பி கேமரா கொண்ட போகோ 5ஜி ஸ்மார்ட்போன் தள்ளுடி விலைக்கு கிடைக்கிறது.

இப்போது பிளிப்கார்ட் தளத்தில் போகோ எம்7 5ஜி (POCO M7 5G) ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி மெமரி மாடலுக்கு 28 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடி போக ரூ. 9,299 விலைக்கு கிடைக்கிறது. மேலும், குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ. 450 தள்ளுடி கிடைக்கிறது. ஆகவே, இந்த ஸ்மார்ட்போனை ரூ.8,849 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

ஆர்டர் பிச்சிக்குது.. ரூ.8,849 ஆஃபர் விலைக்கு POCO 5ஜி போன்.. மாடல்?

போகோ எம்7 5ஜி அம்சங்கள் (POCO M7 5G Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட்டை இந்த போகோ எம்7 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மேலும், அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொடுத்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

மேலும், 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை இந்த போகோ எம்7 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) கொண்டுள்ளது. 6.88 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது, மேலும், இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைத்துள்ளது.

இதுபோக 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட மாடலாக போகோ எம்7 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. டிசி டிம்மிங், ஃபிளிக்கர் ப்ரீ போன்ற சர்டிபிகேஷன் கொண்ட டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. இந்த போகோ எம்7 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி கேமரா கிடைத்துள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சாரை கொண்டுள்ளது.

இந்த கேமராவுக்கு 7 ஃபிலிம் பில்டர்கள் கிடைக்கின்றன. வீடியோ கால்கள் மற்றும் வாய்ஸ் கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5160mAh பேட்டரி கிடைத்துள்ளது. இருப்பினும், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட சார்ஜர் கொடுக்கப்படுகிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்ட மாடலாக இருக்கிறது.

இந்த பேட்டரி இருப்பதால் 8.22 மிமீ தடிமன் கொண்ட பாடி கொடுக்கிறது. 205.39 கிராம் எடை கொண்டுள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள் (Bottom-firing Speakers) கொண்டுள்ளது. மேலும், IP52 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistant) கொடுக்கிறது. 5ஜி எஸ்ஏ (5G SA) கனெக்டிவிட்டி கொடுக்கிறது.

மேலும், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 (Wi-Fi 802.11), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ் (GPS) ஆகிய சப்போர்ட் கொடுக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) கிடைத்துள்ளது. சாட்டின் பிளாக் (Satin Black), மின்ட் கிரீன் (Mint Green) மற்றும் ஓசன் ப்ளூ (Ocean Blue) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO M7 5G 6GB RAM is available under Rs 9000 on Flipkart check price details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X