Home
Mobile

பொளந்து கட்டும் புது POCO போன்.. ரூ.12,000 பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி, 14GB ரேம், IP64.. எந்த மாடல்?

போக்கோ நிறுவனம் மிகவும் சமீபத்தில் தான், அதன் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது. இதற்கிடையில் இப்போது போக்கோ நிறுவனம் அதன் போக்கோ எம்7 4ஜி (POCO M7 4G) ஸ்மார்ட்போனை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

போக்கோவின் இந்த புதிய 4ஜி ஸ்மார்ட்போனானது பெரிய 6.9-இன்ச் FHD+ 144ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 6-சீரிஸ் சிப்செட் மற்றும் 7000mAh பேட்டரி ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்த விரிவான விவரங்களுக்கு தொடர்ந்து படியுங்கள்.

புது POCO போன்.. ரூ.12,000 பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி!

போக்கோ எம்7 4ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை போக்கோ எம்7 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.9-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனலை கொண்டுள்ளது, இது 144Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் , 288Hz டச் சாம்ப்ளிங் ரேட்-ஐ ஆதரிக்கிறது. இதன் டிஸ்பிளே ஹை ப்ரைட்னஸ் மோட் இல் 850 நிட்ஸ் மற்றும் 700 நிட்ஸ் வழக்கமான ப்ரைட்னஸ்-ஐ அடைகிறது. அதே நேரத்தில் குறைக்கப்பட்ட நீல ஒளி, ஃப்ளிக்கர் இல்லாத பயன்பாடு மற்றும் TÜV ரைன்லேண்ட் சான்றிதழ்களை வழங்குகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை போக்கோ எம்7 4ஜி ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 685 சிப்செட்டுடன் வருகிறது. ஸ்டோரேஜ் விருப்பங்களில் 128 ஜிபி சேமிப்பகத்துடன் 6 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை ரேம் விரிவாக்கம் ((ஆக 14ஜிபி அல்லது 16ஜிபி வரை விர்ச்சுவல் ரேம்) ) மற்றும் 2 டிபி வரை மைக்ரோ எஸ்டி ஆதரவு ஆகியவைகளை கொண்டுள்ளது

கேமராக்களை பொறுத்தவரை ரியர் கேமரா செட்டாப்பில் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது, இது 30fps இல் 1080p வீடியோவை பதிவு செய்யும் திறன் கொண்டது. முன்பக்கத்தில், 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது . இது 30fps இல் 1080p வரை வீடியோ பதிவை ஆதரிக்கிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர் ஓஎஸ் 2.0 (HyperOS 2.0) உடன் வருகிறது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார், ஏஐ ஃபேஸ் அன்லாக், ஹை-ரெஸ் ஆடியோ, டால்பி அட்மாஸ், என்எப்சி, ப்ளூடூத் 5.0, வைஃபை (2.4GHz/5GHz), ஐஆர் பிளாஸ்டர் மற்றும் ஐபி64 ஸ்பிளாஸ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது. கடைசியாக பேட்டரியை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.

போக்கோ எம்7 4ஜி ஸ்மார்ட்போனின் விலை: இந்திய விலை மற்றும் விற்பனை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அலிஎக்ஸ்பிரெஸ் (AliExpress) வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.12900 க்கு வாங்க கிடைக்கிறது. இது கருப்பு, நீலம் மற்றும் சில்வர் ஆகிய 3 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.14,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இது வருகிற ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் மதியம் 12 மணிக்கு அக்வா ப்ளூ, கார்பன் பிளாக் மற்றும் குரோம் சில்வர் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும். அறிமுக சலுகைகளை பொறுத்தவரை எச்டிஎப்சி, எஸ்பிஐ அல்லது ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் போது ரூ.1,000 உடனடி தள்ளுபடி அல்லது தகுதியான போன்களுக்கு கூடுதலாக ரூ.1,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco M7 4G with 7000mAh battery Launched Globally Check Out Price Full Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X