Home
Mobile

ரூ.11,999 போதும்.. 50MP கேமரா, 128GB மெமரி, 5000mAh பேட்டரி.. அசத்தும் போக்கோ 5ஜி போன்.. எந்த மாடல்?

போக்கோ நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் போக்கோ எம்6 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலை ரூ. 10,999 விலையிலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை ரூ. 12,999 விலையிலும் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மூன்றாவது வேரியண்ட் ஒன்று தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது போக்கோ எம்6 ப்ரோ போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என்ற வேரியண்ட் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய வேரியண்ட் செப்டம்பர் 14-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது.

ரூ.11,999 போதும்.. 128ஜிபி மெமரி.. அசத்தும் போக்கோ 5ஜி போன்..

அதேபோல் போக்கோ எம்6 ப்ரோ போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.11,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த புதிய போக்கோ போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போனின் சிறப்பு அம்சங்களை இப்போது பார்ப்போம்.

போக்கோ எம்6 ப்ரோ போன் 6.79 இன்ச் (2460 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 550 பீக் பிரைட்ன்ஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு வருகிறது. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் எம்ஐயுஐ 14 ஓஎஸ் (MIUI 14 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் வருகிறது. அதோடு அட்ரினோ 613 ஜிபுயு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ரெட்மி 12 போனுக்கு பிறகு மலிவான விலையில், ஜென் 2 சிப்செட் வருகிறது.

இந்த போன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி என்று 3 வேரியண்ட்களில் வருகிறது. இந்த 4 ஜிபி ரேம் மாடலில் 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது. அதேபோல 6 ஜிபி ரேம் மாடலில் 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த போனில் 1டிபி வரையில் மைக்ரோ எஸ்டி கார்டு (microSD) சப்போர்ட் உள்ளது. இந்த போக்கோ எம்6 ப்ரோ போன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. அதன்படி, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

ரூ.11,999 போதும்.. 128ஜிபி மெமரி.. அசத்தும் போக்கோ 5ஜி போன்..

18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared sensor), டூயல் நானோ சிம் மற்றும் எஸ்டி கார்டு போர்ட், டைப் - சி சார்ஜிங் போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், பாட்டம் ஃபயரிங் லவுட்ஸ்பீக்கர் உள்ளிட்ட அம்சங்கள் வருகின்றன.

அதேபோல, ப்ளூடூத் 5.1, வைபை 6 802.11 ஏசி, 5ஜி எஸ்ஏ உள்ளிட்ட கனெக்டிவிட்டி வருகிறது. இந்த போன் பேட்டரியோடு சேர்த்து 199 கிராம் எடைக் கொண்டுள்ளது. ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green), பவர் பிளாக் (Power Black) ஆகிய கலர்களின் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக கம்மி விலையில் ஒரு அசத்தலான 5ஜி போன் வாங்க வேண்டும் என்று நினைக்கும் பயனர்கள் இந்த போனை வாங்குவது நல்லது.

Best Mobiles in India

English summary
Poco M6 Pro with 4GB RAM and 128GB storage has been launched at a price of Rs.11,999: check sale date : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X