மிரண்டு போவீங்க.. ரூ.9,999 விலையில் 8GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. போட்டு தாக்கிய போக்கோ!
போக்கோ நிறுவனம் முதல்முறையாக ரூ.9,999 பட்ஜெட்டில் 8 ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், 5000mAh பேட்டரி, ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்ட போக்கோ எம்6 ப்ரோ (POCO M6 Pro) போனை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
போக்கோ எம்6 ப்ரோ அம்சங்கள் (POCO M6 Pro Specifications): இந்த போன் 6.79 இன்ச் (2460 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 550 பீக் பிரைட்ன்ஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் எம்ஐயுஐ 14 ஓஎஸ் (MIUI 14 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் வருகிறது. அதோடு அட்ரினோ 613 ஜிபுயு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ரெட்மி 12 போனுக்கு பிறகு மலிவான விலையில், ஜென் 2 சிப்செட் வருகிறது.
இந்த போன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி என்று 2 வேரியண்ட்களில் வருகிறது. இந்த 4 ஜிபி ரேம் மாடலில் 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது. அதேபோல 6 ஜிபி ரேம் மாடலில் 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு 1 டிபி வரையில் மைக்ரோ எஸ்டி கார்டு (microSD) சப்போர்ட் வருகிறது. இந்த போக்கோ எம்6 ப்ரோ போன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. அதன்படி, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது.
18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared sensor), டூயல் நானோ சிம் மற்றும் எஸ்டி கார்டு போர்ட், டைப் - சி சார்ஜிங் போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், பாட்டம் ஃபயரிங் லவுட்ஸ்பீக்கர் உள்ளிட்ட அம்சங்கள் வருகின்றன.
அதேபோல, ப்ளூடூத் 5.1, வைபை 6 802.11 ஏசி, 5ஜி எஸ்ஏ உள்ளிட்ட கனெக்டிவிட்டி வருகிறது. இந்த போன் பேட்டரியோடு சேர்த்து 199 கிராம் எடைக் கொண்டுள்ளது. ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green), பவர் பிளாக் (Power Black) ஆகிய கலர்களின் விற்பனைக்கு வருகிறது.
இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 10,999 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 12,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் இன்று (ஆகஸ்ட் 5) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் ஆர்டர் செய்து கொள்ளலாம். பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.
இந்த போனுக்கு அறிமுக சலுகையாக ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளுக்கு ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, ரூ. 10,999 விலையுள்ள மாடலை வெறும் ரூ.9,999 க்கு வாங்கிக் கொள்ள முடியும். இவ்வளவு மலிவான விலையில் நல்ல பேட்டரி, சிப்செட் கொண்ட 5ஜி போன் கிடைப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பு பெறும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








