Home
Mobile

இதை எதிர்பார்க்கல.. வெறும் ரூ.10,999க்கு போக்கோ 5G போன்.. 50MP கேமரா.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் கம்மியான பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்து மிகப்பெரும் வரவேற்பு பெற்ற போக்கோ எம்6 ப்ரோ (POCO M6 Pro) போனின் புதிய மெமரி மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மாடலுக்கு பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மலிவான பட்ஜெட்டில் வெளியாகும் போன்களுக்கு எப்போதும், வரவேற்பு இருக்கும் என்பதை மறுக்க முடியாது. அந்த வரிசையில், ரூ.11,000 பட்ஜெட்டில் 50 எம்பி கேமரா, 1 டிபி மெமரி சப்போர்ட், ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட், 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் வெளியான போக்கோ எம்6 ப்ரோ மிகப்பெரும் விற்பனையை எட்டியது.

வெறும் ரூ.10,999க்கு போக்கோ 5G போன்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்த வரவேற்பனை மேலும் அதிகரிக்கும் நோக்குடன் போக்கோ (POCO) நிறுவனம், அந்த போனின் புதிய 128 ஜிபி மெமரி மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மாடலின் விற்பனை பிளிப்கார்ட்டில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போனின் முழு அம்சங்கள், விலை விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை இப்போது தெரிந்துகொள்ளுங்கள்.

போக்கோ எம்6 ப்ரோ அம்சங்கள் (POCO M6 Pro Specifications): இந்த போக்கோ போன் 6.79 இன்ச் (2460 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 30/48/60/90Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வந்தன. இப்போது, 4 ஜிபி ரேம் வேரியண்ட்டில் 128 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டு, புது மாடலாக விற்பனைக்கு வந்துள்ளது.

அதோடு 1 டிபி மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஹைபிரிட் டூயல் நானோ சிம் மற்றும் மைக்ரோஎஸ்டி சிலாட் வருகிறது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதோடு அட்ரினோ 613 கிராபிக்ஸ் கார்டு (Adreno 613 GPU) மற்றும் எம்ஐயுஐ 14 (MIUI 14) ஓஎஸ் வருகிறது. இந்த போக்கோ மாடல், டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera System) கொண்டுள்ளது. ஆகவே, எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போக்கோ ப்ரோ மாடலில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது. அதேபோல 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ போன்ற பட்ஜெட் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ப்ளூடூத் 5.1, வை-பை 6 மற்றும் ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.

இந்த போன் ஃபாரெஸ்ட் கிரீன் (Forest Green) மற்றும் பவர் பிளாக் (Power Black) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் இன்று (செப்டம்பர் 14) முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. அதோடு அறிமுக சலுகையாக ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த ஆஃபரை பெற ஐசிஐசிஐ பேங்க் (ICICI Bank) கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டும். ஆகவே, தள்ளுபடி போக இந்த போனை வெறும் ரூ.10,999 விலைக்கு வாங்கிகொள்ள முடியும். மேலும், இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO M6 Pro 5G With 4GB 50MP Camera Goes sale on Flipkart in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X