பிளிப்கார்ட் பிச்சிக்குது.. 50MP கேமரா.. Snapdragon சிப்செட்.. மலிவு விலையில் Poco 5G போன்.. எந்த மாடல்?
அக்டோபர் 8-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2023( Flipkart Big Billion Days Sale 2023)எனும் சிறப்பு விற்பனை தொடங்குகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங், விவோ, போக்கோ, ரியல்மி, மோட்டோ, ஒன்பிளஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் போன்களை கம்மி விலையில் வாங்க முடியும்.
அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ 5ஜி போனை கம்மி விலையில் வாங்க முடியும். அதாவது சமீபத்தில் போக்கோ நிறுவனம் போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (Poco M6 Pro 5G) போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் அக்டோபர் 8-ம் தேதி நடைபெற உள்ள சிறப்பு விற்பனையில் இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி போனை ரூ.8,999 விலையில் வாங்க முடியும்.

6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (FHD+) எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
சக்திவாய்ந்த ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மூலம் இயங்குகிறது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
இந்த போனின் மென்பொருள் வசதி மிகவும் அருமையாக இருக்கிறது என்றே கூறலாம். அதேபோல் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு வெளிவந்துள்ளது இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் விரைவில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared sensor), டூயல் நானோ சிம் மற்றும் எஸ்டி கார்டு போர்ட், டைப் - சி சார்ஜிங் போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், பாட்டம் ஃபயரிங் லவுட்ஸ்பீக்கர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.
இதுதவிர ப்ளூடூத் 5.1, வைபை 6 802.11 ஏசி, 5ஜி எஸ்ஏ உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனின் எடை 199 கிராம் ஆகும். குறிப்பாக 5ஜி ஆதரவுடன் தரமான அம்சங்களைக் கொண்டுள்ளதால் இந்த போனை நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








