6.79-இன்ச் டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. தூள் கிளப்ப போகும் புதிய POCO போன்.. ஆகஸ்ட் 5 ரெடியா இருங்க..
போக்கோ நிறுவனம் தனது அசத்தலான ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி இந்தியாவில் போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (Poco M6 Pro 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போன் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதாவது இந்த போக்கோ எம்6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி கேமரா, தரமான பேட்டரி மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் இந்த போனின் விலை, அம்சங்கள், விற்பனை போன்ற விவரங்கள் வெளியாக உள்ளன. இப்போது இந்த போனின் அனைத்து விவரங்களையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆனது மொத்தம் மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வேரியண்ட் ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கும். 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஆப்ஷன் ரூ.15,999 விலையிலும், கடைசியாக உள்ள 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வேரியண்ட் ரூ.16,999 விலையிலும் வாங்குவதற்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (Poco M6 Pro 5G specifications) போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம். அதாவது 6.79-இன்ச் ஐபிஎஸ் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
குறிப்பாக 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் இந்த போனில் ஃபுல் எச்டி டிஸ்பிளே இருப்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது போக்கோ எம்6 ப்ரோ 5ஜி. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் ரியர் கேமராவுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். ஆனால் 8எம்பி செல்பி கேமராவுக்கு பதிலாக 13எம்பி கேமரா வழங்கப்பட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.
போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Qualcomm Snapdragon 4 Gen2) சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட செயல்திறன் செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புத்தம் புதிய போக்கோ எம்6 ப்ரோ 5ஜி போன் அறிமுகமாகும்.
சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். பின்பு டால்பி ஆடியோ மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வசதிகள் உடன் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த போன் அறிமுகமாகும்.
photo courtesy:Pricebaba


Click it and Unblock the Notifications








