Home
Mobile

அடேங்கப்பா.. விலை இவ்ளோ கம்மியா? 256ஜிபி மெமரி.. 50எம்பி கேமரா.. புதிய போக்கோ மாடல் அறிமுகம்..

போக்கோ நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த போன் 50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, பெரிய டிஸ்பிளே மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த போன் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில் புதிய வேரியண்ட் ஒன்று தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்6 ப்ரோ 5ஜி மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை இவ்ளோ கம்மியா? 256ஜிபி மெமரி.. புதிய போக்கோ மாடல் அறிமுகம்..

குறிப்பாக 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்6 ப்ரோ 5ஜி மாடலின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும். எனவே 8ஜிபி ரேம் கொண்ட போக்கோ எம்6 ப்ரோ 5ஜி மாடலை ரூ.12,999 விலையில் வாங்க முடியும்.

அதேசமயம் போக்கோ எம்6 ப்ரோ 5ஜி போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.9,999 விலையிலும், 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.10,999 விலையிலும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.11,999 விலையிலும் வாங்க முடியும். மேலும் இப்போது போக்கோ எம்6 ப்ரோ 5ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.79-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (FHD+) எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது . மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மூலம் இயங்குகிறது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

விலை இவ்ளோ கம்மியா? 256ஜிபி மெமரி.. புதிய போக்கோ மாடல் அறிமுகம்..

18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு வெளிவந்துள்ளது இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared sensor), டூயல் நானோ சிம் மற்றும் எஸ்டி கார்டு போர்ட், டைப் - சி சார்ஜிங் போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், பாட்டம் ஃபயரிங் லவுட்ஸ்பீக்கர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

இதுதவிர ப்ளூடூத் 5.1, வைபை 6 802.11 ஏசி, 5ஜி எஸ்ஏ உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன்.குறிப்பாக கம்மி விலையில் அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Poco M6 Pro 5G 8GB RAM, 256GB Storage Launched: Goes on Sale Today on Flipkart : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X