யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல OIS கேமரா.. 12GB ரேம்.. 67W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த போன்?
வெறும் ரூ.20000 பட்ஜெட்டில் 12ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 67W சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே போன்ற பக்கா அம்சங்களை கொண்ட போக்கோ எம்6 ப்ரோ 4ஜி (POCO M6 Pro 4G) போன் வரும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகிறது.
போக்கோ எம்6 ப்ரோ 4ஜி அம்சங்கள் (POCO M6 Pro 4G Specifications): இந்த போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்பிளே வருகிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. 64 எம்பி மெயின் கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera Ssytem) வருகிறது.

இதுவொரு ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட கேமராவாகும். அதேபோல 67W டர்போ சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இந்த அம்சங்களை மட்டுமே போக்கோ நிறுவனம், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு வரும் ஜனவரி 11ஆம் இந்த போனின் குளோபல் வெளியீடு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆகவே, அதற்கு அடுத்த சில வாரங்களில் இந்தியா உள்பட மற்ற நாடுகளில் இந்த போன் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த போனின் மற்ற அம்சங்கள் மார்கெட் வட்டாரங்களில் கசிந்துள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம். இந்த போக்கோ எம்6 ப்ரோ 4ஜி போனில், 6.67 இன்ச் புல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது.
இதுவொரு பிளாட் டிஸ்பிளே (Flat Display) மாடலாகும். இந்த போக்கோ போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மீடியாடெக் ஹீலியோ ஜி99 எஸ்ஓசி (MediaTek Helio G99 SoC) சிப்செட் கொண்டிருக்கிறது. அதோடு 5,000mAh பேட்டரி மற்றும் டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் வருகிறது.

16 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. ஆகவே, இந்த போக்கோ எம்6 ப்ரோ 4ஜி போனின் அம்சங்கள் சற்று பிரீமியமாகவே கொடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது. இந்த போனின் விலை ரூ.20,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்படும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த போனின் 5ஜி வேரியண்ட் ஏற்கனவே, இந்தியாவில் வெளியாகிவிட்டது.
இந்த 5ஜி போனின் ஆரம்ப விலையானது, வெறும் ரூ.10,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலைக்கு ஏற்பவே, அந்த போனின் அம்சங்கள் மலிவாக கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், போக்கோ எம்6 ப்ரோ 5ஜி போனில் 6.79 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது.
இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 550 பீக் பிரைட்ன்ஸ் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் கொண்டிருக்கிறது. அட்ரினோ 613 ஜிபுயு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.
18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொண்டிருக்கிறது. இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 10,999 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 12,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. இப்போது, இந்த போனுக்கும் முதலில் பார்த்த 4ஜி வேரியண்ட்டுக்குமான வேறுபாடுகள் தெரிந்திருக்கும். ஆகவே, இந்த 5ஜி போன் பெற்ற வரவேற்புவிட போக்கோ எம்6 ப்ரோ 4ஜி மாடலுக்கு சற்று கூடுதலாக வரவேற்பு இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








