போட்டு தாக்கிய POCO! இவ்ளோ கம்மி விலைக்கு 120Hz டிஸ்பிளே, 1TB ஸ்டோரேஜ், OIS கேமரா, 67W சார்ஜிங்-ஆ! என்ன மாடல்?
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான டிஸ்பிளே, ஓஐஎஸ் ஆதரவு உடனான 64எம்பி மெயின் கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000எம்ஏஎச் பேட்டரி உட்பட.. பல முக்கிய அம்சங்களுடன் புதிய போக்கோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்ன மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது போக்கோ எம்6 ப்ரோ 4ஜி (Poco M6 Pro 4G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். போக்கோ எக்ஸ்6 சீரீஸ் உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த போக்கோ ஸ்மார்ட்போன் கடந்த மே 2023-ல் இந்தியாவில் அறிமுகமான போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (Poco M6 Pro 5G) மாடலுடன் இணைகிறது.

போக்கோ எம்6 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: இது 2,400 x 1,080 பிக்சல்ஸ் ரெசல்யூசன், 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 2160ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட், 1 300 பீக் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன் உடனான 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஃப்ளோ அமோஎல்இடி (Flow AMOLED) பேனலை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இது 6என்எம் மீடியாடெக் ஹீலியோ ஜி99 அல்ட்ரா (6nm MediaTek Helio G99-Ultra SoC) மூலம் இயக்கப்படுகிறது. இது 12ஜிபி வரையிலான LPDDR4X ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை ஸ்டோரேஜை விரிவாக்க முடியும்.

போக்கோவின் இந்த லேட்டஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 (Android 12) அடிப்படையிலான எம்ஐயுஐ 14 (MIUI 14) உடன் அனுப்பப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை இதில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) உடனான 64 மெகாபிக்சல் மெயின் சென்சார் + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது.
முன்பக்கத்தில், டிஸ்பிளேவின் மேற்புற மையத்தில் ஹோல்-பஞ்ச் ஸ்லாட்டில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரி உள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.2, என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவைகளை கொண்டுள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் போக்கோ எம்6 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் உடன் வருகிறது. கடைசியாக அளவீட்டில் இது 161.1மிமீ x 74.95மிமீ x 7.98மிமீ மற்றும் எடையில் 179 கிராம் எடையை கொண்டுள்ளது.
போக்கோ எம்6 ப்ரோ 4ஜி விலை: இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகமாகி உள்ளது. பேஸிக் ஸ்டோரேஜ் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.16,500 க்கும், ஹை-எண்ட் ஆப்ஷன் சுமார் ரூ.20,700 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிளாக் (Black), ப்ளூ (Blue) மற்றும் பர்பிள் (Purple) என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள போக்கோ எம்6 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் எப்போது இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்கிற தகவல் இல்லை. இது சரியாக எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்கிற விவரத்தையும் போக்கோ நிறுவனம் பகிர்ந்துகொள்ளவில்லை.
போக்கோ எக்ஸ்6 சீரீஸ் இந்திய விலை நிர்ணயம்: போக்கோ எக்ஸ்6 ப்ரோவின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.24,999-க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.26,999-க்கும் அறிமுகமாகி உள்ளது. மறுகையில் உள்ள போக்கோ எக்ஸ்6-ன் 8ஜிபி ரேம் + 256ஜிபி, 12ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் முறையே ரூ.18,999, ரூ.21,999 மற்றும் ரூ.22,999-க்கும் அறிமுகமாகி உள்ளன. ஜன.16 முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








