SALE பொளந்து கட்டுது.. வெறும் ரூ.9,699 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. 5030mAh பேட்டரி.. எந்த மாடல்?
108 எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு வாங்க வேண்டுமானால், இப்போது டிஸ்கவுண்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும் போக்கோ எம்6 பிளஸ் 5ஜி (POCO M6 Plus 5G) போனை ஆப்ஷனில் எடுக்கலாம். ஏனென்றால், 108 எம்பி கேமரா மட்டுமல்லாமல், 12 ஜிபி ரேம், 5030mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களையும் இந்த போக்கோ போன் கொடுக்கிறது. பேங்க் டிஸ்கவுண்ட் விவரங்கள், பீச்சர்கள் இதோ.
இந்த போக்கோ போனில் 6 ஜிபி ரேம் (6 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் (8 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் அறிமுகமாகி இருக்கின்றன. ஆகவே, 6 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.13,499ஆகவும், 8 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.14,499ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், இப்போது பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் 6 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.10,699ஆக இருக்கிறது. இந்த விலையில் வாங்கி கொள்ள எந்தவொரு பேங்க் கார்டுகளும் தேவையில்லை. அதுவே உங்களிடம் ஜே & கே பேங்க் மாஸ்டர் கிரெடிட் கார்டு இருந்தால் கூடுதலாக ரூ.1000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.
ஆகவே, ரூ.9,699 பட்ஜெட்டில் இப்போது ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போனுக்கு ரூ.10,150 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கொடுக்கப்படுகிறது. ஐஸ் சில்வர் (Ice Silver) மற்றும் கிராஃபைட் பிளாக் (Graphite Black) கலர்களில் ஆர்டர் செய்யலாம். மிஸ்டி லாவெண்டர் (Misty Lavender) கலரும் உள்ளது.
போக்கோ எம்6 பிளஸ் 5ஜி அம்சங்கள் (POCO M6 Plus 5G Specifications): இந்த போக்கோ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமே வருகிறது. இருப்பினும், 2 வருட ஓஎஸ் அப்டேட்களை கொடுக்கிறது. போக்கோவின் ஹைபர் ஓஎஸ் (Hyper OS) மற்றும் அட்ரினோ 613 ஜிபுயு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்கிறது.
இந்த பட்ஜெட்டில் பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஇ (Octa Core 4nm Snapdragon 4 Gen 2 AE) சிப்செட் கிடைக்கிறது. அதேபோல பட்ஜெட்டில் எதிர்பார்க்காதபடி கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு மற்றும் வெட் டச் (Wet Touch) டிஸ்பிளே கிடைக்கிறது.
550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.79 இன்ச் (2460 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே, புல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளது. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் மட்டுமே இருந்தாலும் சாம்சங் ஐசோசெல் எச்எம்6 (Samsung ISOCELL HM6) சென்சாருடன் மெயின் கேமராவை கொடுக்கிறது.
ஆகவே, 3X இன்-சென்சார் ஜூம் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 13 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போனில் 5030mAh பேட்டரி, அந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ரூ.10000 பட்ஜெட்டுக்கு பீச்சர்களில் ஒன்றும் குறையில்லாத மாடலாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








