Home
Mobile

மார்க்கெட்டே திணறப்போகுது.. 50எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. புது 5ஜி போனை களமிறக்கும் POCO.. எந்த மாடல்?

போக்கோ நிறுவனம் அடுத்து இந்தியாவில் போக்கோ எம்6 பிளஸ் (Poco M6 Plus 5G) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 50எம்பி கேமரா, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும்.

தற்போது BIS சான்றிதழ் தளத்தில் இந்த போக்கோ எம்6 பிளஸ் போன் காணப்பட்டுள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மார்க்கெட்டே திணறப்போகுது.. புது 5ஜி போனை களமிறக்கும் POCO..

போக்கோ எம்6 பிளஸ் 5ஜி அம்சங்கள் ( Poco M6 Plus 5G specifications): 6.79-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும். பின்பு 1,080x2,460 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்வு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

மார்க்கெட்டே திணறப்போகுது.. புது 5ஜி போனை களமிறக்கும் POCO..

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Snapdragon 4 Gen 2 SoC) சிப்செட் வசதியுடன் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதேபோல ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புத்தம் புதிய போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மாரட்போன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பி கேமரா வசதி இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

மார்க்கெட்டே திணறப்போகுது.. புது 5ஜி போனை களமிறக்கும் POCO..

5030எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (33W fast charging) வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், வைஃபை, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்கள் போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. அதேபோல் இந்தியாவில் போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco M6 Plus 5G Spotted on BIS Site: May be launched in India soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X