மலிவு விலையில் ஒரு மாஸ்டர் பீஸ்.. 108MP கேமரா.. LCD டிஸ்பிளே.. 33W சார்ஜிங்.. 128GB மெமரி.. எந்த மாடல்?
போக்கோ நிறுவனம் இந்தியாவில் போக்கோ எம்6 பிளஸ் 5ஜி (Poco M6 Plus 5G) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக 108எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன். இப்போது ஆன்லைனில் வெளியான போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
போக்கோ எம்6 பிளஸ் 5ஜி (Poco M6 Plus 5G specifications): 6.79-இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 650 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Qualcomm Snapdragon 4 Gen 2) சிப்செட் வசதியுடன் இந்த புதிய போக்கோ போன் இந்தியாவில் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் ஹைப்பர்ஓஎஸ் (HyperOS)சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த போக்கோ போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
IP53 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 3.5எம்எம் ஆடியோ ஜாக், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) உள்ளிட்ட பல அசத்தலான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன்.

5030எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன் வெளிவரும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (33W fast charging) வசதியும் உள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன் வெளிவரும். குறிப்பாக ரூ.13,999 பட்ஜெட்டில் இந்த புதிய போக்கோ போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. வரும் வாரங்களில் போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
photo courtesy: Poco


Click it and Unblock the Notifications








