POCO M6 Plus 5G சும்மா மிரட்டுதே.. IP53 வாட்டர் ப்ஃரூப், 3x ஜூமிங் 108MP கேமரா, 120Hz டிஸ்பிளே.. விலை என்ன?
போக்கோ (POCO) நிறுவனத்தின் புதிய 5ஜி மாடலாக போக்கோ எம்6 பிளஸ் 5ஜி (POCO M6 Plus 5G) ஸ்மார்ட்போன் ஆனது இன்று மாலை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அறிமுகத்திற்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே (Display), சிப்செட் (Chipset), கேமரா (Camera) அம்சங்கள் விவரங்கள் அதிகாரப்பூரவமாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளன. கூடவே இது சரியாக என்ன விலைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் (India Pricing Details) என்கிற தகவலும் கிடைத்து உள்ளது.
போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் சரியான எப்போது அறிமுகமாகும்? போக்கோ நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் இன்று மாலை, அதாவது ஆகஸ்ட் 1 ஆம் தேதி மாலை 4 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். பெரும்பாலான பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன்களின் அறிமுகங்களை போலவே, இதற்கென பிரத்யேக வெளியீட்டு நிகழ்வு எதுவும் இருக்காது. இது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக நேரடியாக அறிமுகம் செய்யப்படும்.

போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன? டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz adaptive refresh rate) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் (Corning Gorilla Glass 3 protection) உடனான 6.79-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று போக்கோ நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இது, இந்த விலைப்பிரிவில் டூயல் கிளாஸ் வடிவமைப்புடன் வரும் ஒரே ஸ்மார்ட்போன் (Segment's only dual-sided glass design) என்றும் கூறுகிறது.
சிப்செட்டை பொறுத்தவரை, போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஇ சிப்செட் (Qualcomm Snapdragon 4 Gen 2 AE - Accelerated edition) உடன் வரும். இது 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்படும் என்றும் போக்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ( Android 14) அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) அவுட்-ஆஃப்-பாக்ஸில் இயங்கும்.
கேமராக்களை பொறுத்தவரை, போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 3எக்ஸ் இன்-சென்சார் ஜூம் ஆதரவுடன் (3x in-sensor zoom support) 108 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சாரை கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual rear camera setup) கொண்டிருக்கும் என்பதை போக்கோ உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை முன்பக்கத்தில் உள்ள 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா பூர்த்தி செய்யும் என்று போக்கோ நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) உடன் வரும். இது 8.32 மிமீ தடிமனை கொண்டிருக்கும். தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்காக ஐபி3 ரேட்டிங் கட்டமைப்பை (IP53-rated build for dust and splash resistance) கொண்டிருக்கும். கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் கிராஃபைட் பிளாக் ( Graphite Black), ஐஸ் சில்வர் (Ice Silver) மற்றும் மிஸ்டி லாவெண்டர் (Misty Lavender) ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும்.
போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரும்? எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய சந்தையில் ரூ.14,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இது பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








