ஆகஸ்ட் 1-ல் களமிறங்கும் Poco 5ஜி போன்.. மலிவு விலை.. 108MP கேமரா.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?
போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ எம்6 பிளஸ் 5ஜி (Poco M6 Plus 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய போன் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 13ஆர் ஸ்மார்ட்போனை போலவே இந்த போனின் போக்கோ எம்6 பிளஸ் 5ஜி வடிவமைப்பு உள்ளது. ஆனாலும் இந்த போன் குறைந்த விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் வெளியான இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
போக்கோ எம்6 பிளஸ் 5ஜி அம்சங்கள் (Poco M6 Plus 5G Specifications): 6.7-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த போக்கோ எம்6 பிளஸ் 5ஜி வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமான ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன். இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழஙகும். அதேபோல் ஹைப்பர் ஓஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு வழங்கப்படும்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போக்கோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
5030எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவு கொண்டுள்ளது போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.13,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் கம்மி விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது.
photo courtesy: Flipkart,Poco


Click it and Unblock the Notifications








