முடிச்சு விட்ட பிளிப்கார்ட்.. ரூ.9,999 பட்ஜெட்ல 108எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. 5030mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் அசத்தலான போக்கோ எம்6 பிளஸ் 5ஜி (POCO M6 Plus 5G) ஸ்மார்ட்போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், 108எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போக்கோ போனின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போனுக்கு 37 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

போக்கோ எம்6 பிளஸ் 5ஜி அம்சங்கள் (Poco M6 Plus 5G Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஈ 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 AE 4nm) சிப்செட் கொண்டுள்ளது போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன். மேலும் இதில் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.
6.79-இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டு வெளிவந்தது இந்த போன். மேலும் 2460 x 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் , கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3), 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் போன்ற அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
108 எம்பி மெயின் கேமரா (Samsung ISOCELL HM6) + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக்
கொண்டுள்ளது போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா கொண்டு வெளிவந்துள்ளது போக்கோ எம்6 பிளஸ் 5ஜி மாடல். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போக்கோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), பாட்டம் ஃபயரிங் லவுட்ஸ்பீக்கர் (Bottom Firing Loudspeaker), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. IP53 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கொண்டுள்ளது இந்த போக்கோ போன்.
5030mAh பேட்டரி உடன் இந்த போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.
அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்.


Click it and Unblock the Notifications








