Home
Mobile

ஆர்டர் மிரளும்.. வெறும் ரூ.11,499 போதும்.. 16GB ரேம்.. AI கேமரா.. 1TB மெமரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் மலிவு விலை போன்களுக்கு கிராகி வந்துவிடும்படி ரூ.11,000 பட்ஜெட்டில் 16ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், 50எம்பி கேமரா, 5,000mAh பேட்டரி போன்ற பக்கா அம்சங்களுடன் போக்கோ எம்6 5ஜி (POCO M6 5G) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

போக்கோ எம்6 5ஜி அம்சங்கள் (POCO M6 5G Specifications): இந்த போக்கோ போனில் 6.74 இன்ச் எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

ரூ.11,499 போதும்.. 16GB ரேம்.. AI கேமரா.. 1TB மெமரி.. எந்த மாடல்?

அதோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு கொண்டிருக்கிறது. இந்த போக்கோ எம்6 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (MediaTek Dimensity 6100+) சிப்செட் வருகிறது. அதோடு எம்ஐயுஐ 14 (MIUI 14) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனை கிடைக்க இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், 8 ஜிபிக்கான டர்போ ரேம் (Turbo RAM) சப்போர்ட் வருகிறது.

மேலும், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது.

ரூ.11,499 போதும்.. 16GB ரேம்.. AI கேமரா.. 1TB மெமரி.. எந்த மாடல்?

இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போக்கோ எம்6 5ஜி மாடலில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor), 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் (Headphone Jack) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த போக்கோ எம்6 5ஜி போனில் ஏஐ லென்ஸ் (AI Lens) கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, எல்இடி பிளாஷ் (LED Flash Light) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு ஏஐ லென்ஸ் கேமரா இடம்பெற்றுள்ளது. அதேபோல 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த போன் 195 கிராம் எடை கொண்டுள்ளது. 8.19 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (Splash & Dust Resistance) வருகிறது. பிரீமியம் டிசைனில் ஓரியன் ப்ளூ (Orion Blue) மற்றும் கேலடிக் பிளாக் (Glatic Black) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்த போனில் வை-பை 5 (Wi-Fi 5), 5ஜி எஸ்/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி எல்டிஇ (Dual 4G LTE), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.9,499ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.10,499ஆகவும் இருக்கிறது.

அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.12,499ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போக்கோ எம்6 5ஜி போன் வரும் டிசம்பர் 26ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. பிளிப்கார்ட் தளத்தில் இந்த போனை ஆர்டர் செய்துகொள்ளலாம். மூன்று வேரியண்ட்களுக்கும் அறிமுக சலுகையாக ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO M6 5G With Dimensity 6100 Plus, 16GB RAM Sale From December 26 on Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X