பட்டி தொட்டி எங்கும் பறக்கும் ஆர்டர்.. வெறும் ரூ.9499 போதும்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?
போக்கோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் டிசம்பர் 22-ம் தேதி (நாளை) போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது போக்கோ நிறுவனம். இந்நிலையில் போக்கோ எம்6 5ஜி போனின் விலை பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது சமீபத்தில் இந்நிறுவனம் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தான் போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த போக்கோ எம்6 5ஜி ரூ.9,499 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மலிவு விலையில் இந்த போன் வெளிவருவதால் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

போக்கோ எம்6 5ஜி அம்சங்கள் (POCO M6 5G specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (MediaTek Dimensity 6100+) சிப்செட் வசதியுடன் இந்த அட்டகாசமான போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த போக்கோ ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த போக்கோ எம்6 5ஜி மாடல் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
6.74-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே (LCD display) வசதியுடன் போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1600 × 720 0 பிக்சல்ஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 90Hz refresh rate), 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 போன்ற பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளது.
இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன்.
மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது. அதேபோல் இந்த போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner)கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த புதிய போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். அதேசமயம் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளது.


Click it and Unblock the Notifications








