Home
Mobile

டிச.22 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 50MP கேமரா, 5000mAh பேட்டரி.. மலிவு விலையில் வரும் POCO போன்..

போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ எம்6 5ஜி (Poco M6 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் டிசம்பர் 22-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய போக்கோ போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான போக்கோ எம்6 5ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

போக்கோ எம்6 5ஜி அம்சங்கள் (Poco M6 5G specifications): ஆன்லைனில் வெளியான தகவலின்படி 6.74-இன்ச் ஃபுல் எச்டி எல்சிடி டிஸ்பிளே ( LCD display) வசதியுடன் இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 90Hz refresh rate), 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்ப வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

50MP கேமரா, 5000mAh பேட்டரி.. மலிவு விலையில் வரும் POCO போன்..

அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ்(MediaTek Dimensity 6100+) சிப்செட் வசதியுடன் இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த போக்கோ ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 ( Android 13) இயங்குதள வசதியுடன் இந்த புதிய போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்(Side-mounted Fingerprint Scanner) கொடுக்கப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன்.

குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த புதிய போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50MP கேமரா, 5000mAh பேட்டரி.. மலிவு விலையில் வரும் POCO போன்..

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. அதேபோல் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, போக்கோ எம்6 5ஜி போன் ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் போக்கோ நிறுவனம் அடுத்த ஆண்டு பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco M6 5G will be launched in India on December 22: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X