வெறும் ரூ.9,499 போதும்.. புதிய போக்கோ 5ஜி போன்.. நம்பி வாங்க 4 காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க 1 காரணம்..
போக்கோ நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து விற்பனைக்குக் கொண்டுவந்தது. குறிப்பாக 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்6 5ஜி போனின் விலை ரூ.10,499-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.11,499 விலையிலும், 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.13,499 விலையிலும் வாங்க முடியும்.
அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். எனவே 4ஜிபி ரேம் கொண்ட போக்கோ ஸ்மார்ட்போனை ரூ.9,499 விலையில் வாங்க முடியும். மேலும் பிளாக் மற்றும் ஓரியன் ப்ளூ நிறங்களில் இந்த புதிய போக்கோ எம்6 5ஜி போன் விற்பனைக்கு வருகிறது.

கம்மி விலையில் கிடைக்கும் இந்த போக்கோ எம்6 5ஜி மாடலை வாங்கலாமா வேண்டாமா என்கிற குழப்பம்/ தயக்கம் உங்களிடம் இருந்தால், கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்குத் தான் வந்துள்ளீர்கள். போக்கோ எம்6 5ஜி-ஐ ஏன் நம்பி வாங்கலாம் என்பதற்கான 4 நல்ல காரணங்களும், ஏன் வாங்காமல் தவிர்க்கலாம் என்பதற்கான 1 நியாயமான காரணங்களும் இதோ.
முதல் காரணம்: பல முன்னணி நிறுவனங்கள் 5ஜி போனை சற்று உயர்ந்த விலையில் தான் விற்பனை செய்கின்றன. ஆனால் மலிவு விலையில் இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் ஆக்டோ-கோர் மீடியாடெக் 6100 பிளஸ் 6என்எம் பிராசஸர் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm processor) உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். இதுதவிர ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது இந்த போன். எனவே கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த போனில் 5ஜி வசதி இருப்பதால் தடையின்றி வேகமாக இணையத்தைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது காரணம்: 6.74-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே மென்மையான அனுபவத்தை வழங்குகிறது. அதேபோல் இந்த போனின் டிஸ்பிளேவை வேகமாக இயக்க முடியும்.
மூன்றாவது காரணம்: 5000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த போக்கோ எம்6 5ஜி போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக சிறந்த பேட்டரி பேக்கப் தரும் போன்களை தேடும் பயனர்கள் இந்த போக்கோ போனை தேர்வு செய்வது நல்லது.

நான்காவது காரணம்: இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல் 195 கிராம் எடை கொண்டுள்ளது இந்த போன். பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(Side-mounted Fingerprint Sensor) மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
வாங்காமல் தவிர்ப்பதற்கான 1 காரணம்: 50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனால் இந்த கேமராக்கள் நாம் எதிர்பார்க்கும் தரமான புகைப்படங்களைக் கொடுக்காது. அதேசமயம் குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில் இந்த கேமராக்கள் தெளிவான படங்களை எடுக்காது. பின்பு 5எம்பி செல்பி கேமரா உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதற்கு பதிலாக 13எம்பி கேமரா கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். இந்த போனின் கேமராவில் மட்டும் சொதப்பி உள்ளது போக்கோ நிறுவனம்.


Click it and Unblock the Notifications