Home
Mobile

பரபரக்கும் பிளிப்கார்ட்.. வெறும் ரூ.9,499 போதும்.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த போன்?

போக்கோ நிறுவனம் கடந்த வாரம் இந்தியாவில் போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் பெரிய டிஸ்பிளே, 50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது. மேலும் இந்த போக்கோ எம்6 5ஜி மாடலின் விலை, ஆஃபர் மற்றும் விவரக்குறிப்புகளை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

பரபரக்கும் பிளிப்கார்ட்.. வெறும் ரூ.9,499 போதும்.. எந்த போன்?

போக்கோ எம்6 5ஜி விலை: 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்6 5ஜி போனின் விலை ரூ.10,499-ஆக உள்ளது. பின்பு இதன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.11,499 விலையிலும், 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.13,499 விலையிலும் வாங்க முடியும்.

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். எனவே ரு.9,499 விலையில் இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கிவிட முடியும். இதுதவிர ஏர்டெல் நிறுவனம் சார்பில் இந்த போனுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிளாக் மற்றும் ஓரியன் ப்ளூ நிறங்களில் இந்த புதிய போக்கோ எம்6 5ஜி போன் விற்பனைக்கு வருகிறது.

பரபரக்கும் பிளிப்கார்ட்.. வெறும் ரூ.9,499 போதும்.. எந்த போன்?

போக்கோ எம்6 5ஜி அம்சங்கள் (POCO M6 5G specifications): 6.74-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவம் கொடுக்கும்.

சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் மீடியாடெக் 6100 பிளஸ் 6என்எம் பிராசஸர் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm processor) உடன் வெளிவந்துள்ளது போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன். இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது இந்த போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

50எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

பரபரக்கும் பிளிப்கார்ட்.. வெறும் ரூ.9,499 போதும்.. எந்த போன்?

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(Side-mounted Fingerprint Sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த போக்கோ எம்6 5ஜி போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 5000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த போக்கோ போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO M6 5G goes on sale today for the first time on Flipkart: check price, offers specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X