அள்ளி வீசுது பிளிப்கார்ட்.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. ஆஃபரில் போக்கோ 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் பிளிப்கார்ட் ரிபப்ளிக் டே சேல் 2024 எனும் சிறப்பு விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரெட்மி, சாம்சங், மோட்டோ, விவோ, ரியல்மி,சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களின் போன்களை மிகவும் கம்மி விலையில் வாங்க முடியும்.
அதேபோல் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த போக்கோ எம்6 5ஜி (4ஜி ரேம் + 128ஜிபி மெமரி) போனுக்கு 19 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை ரூ.10,499 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.

எனவே போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை மிகவும் குறைவான விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்புடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போக்கோ ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
போக்கோ எம்6 5ஜி அம்சங்கள் (POCO M6 5G specifications): ஆக்டோ-கோர் மீடியாடெக் 6100 பிளஸ் 6என்எம் பிராசஸர் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm processor) உடன் வெளிவந்துள்ளது போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன். இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது இந்த போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன் 6.74-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவம் கொடுக்கும்.
50எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

5000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த போக்கோ போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(Side-mounted Fingerprint Sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) உள்ளிட்ட அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications








