Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.10000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 12GB ரேம்.. 5030mAh பேட்டரி.. எந்த மாடல்?

108 எம்பி கேமரா, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம், ஃபுல் எச்டிபிளஸ் டிஸ்பிளே, 5,030mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் மீடியாடெக் ஹீலியோ 699 அல்ட்ரா சிப்செட் கொண்ட போக்கோ எம்5 4ஜி (POCO M6 4G) போனின் குளோபல் வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் ரேம்/மெமரி வேரியண்ட்கள் மற்றும் விலை விவரங்களும் வெளியாகி மார்கெட்டை அதிரவிட்டுள்ளது. ஏனென்றால், ரூ.10000 பட்ஜெட்டில் 108 எம்பி கேமராவுடன் வெளியாக இருக்கிறது.

போக்கோ எம்6 4ஜி விலை (POCO M6 4G Price): இந்த போக்கோவில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் வெளியாக இருக்கின்றன. 128 ஜிபி மாடலின் விலை ரூ.10,773ஆகவும், 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,444ஆகவும் இருக்கிறது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.10000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 12GB ரேம்!

இந்த போக்கோ எம்6 4ஜி போனில் பிளாக் (Black), ஒயிட் (White) மற்றும் பர்பிள் (Purple) ஆகிய கலர்கள் வருகின்றன. இந்த பட்ஜெட்டிலும் போக்கோ எம்6 ப்ரோ மாடலை போலவே டூயல் டோன் மற்றும் டூயல் கேமரா சிஸ்டம் கொண்ட பேனல் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த போனின் வெளியீட்டு தேதி மற்றும் பீச்சர்களை இப்போது பார்க்கலாம்.

போக்கோ எம்6 4ஜி அம்சங்கள் (POCO M6 4G Specifications): இந்த போக்கோவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.79 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (Punch-hole Display) டிசைன் கொண்டிருக்கிறது. ஆகவே, ஃபரன்ட் டிசைனும் பீரிமயம் லுக் கொடுக்கிறது.

பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மீடியாடெக் ஹீலியோ 699 அல்ட்ரா எஸ்ஓசி (MediaTek Helio G99 Ultra SoC) சிப்செட் வருகிறது. கிராபிக்ஸ் கார்டு பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) கொண்டிருக்கிறது. இந்த போனில் 2 வேரியண்ட்கள் இருக்கிறது.

ஆகவே, 6 ஜிபி ரேம் வேரியண்ட்டில் 6 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் வேரியண்ட்டில் 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது. டூயல் ஹைபிரிட் சிம் சிலாட் (Dual Hybrid SIM Slot) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) வருகின்றன. அதேபோல டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) கொண்டிருக்கிறது.

இந்த போக்கோ எம்6 4ஜி போனில் 108 எம்பி ப்ரோ கிரேடு மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. அதேபோல 13 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. பட்ஜெட் மாடல்களில் மிட்-ரேஞ்ச் அவுட்புட் கேமரா எதிர்பார்க்கும் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு இந்த மாடல் பக்காவாக இருக்கும்.

IP53 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது. 5,030mAh பேட்டரி உள்ளது. டூயல் 4ஜி வோஎல்டி, ப்ளூடூத் 5.3, வை-பை 5 மற்றும் ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி வருகிறது. மேற்கூறிய பீச்சர்களில் ரேம், மெமரி, கேமரா மற்றும் பேட்டரி பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. மற்றவை மார்கெட்டில் கசிந்தவை. வரும் ஜூன் 11ஆம் தேதி இந்த போன் வெளியாகிறது.

Best Mobiles in India

English summary
POCO M6 4G With 108MP Camera, 8GB RAM To Launch Globally on June 11 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X