ரூ.10,000 க்கு இப்படி ஒரு ஸ்மார்ட்போனா.. உச்ச அம்சத்தில் அறிமுகமான Poco M5!

|

Poco M5 ஸ்மார்ட்போனானது இந்தியாவிலும் உலக சந்தையிலும் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Poco M4 தொடரின் வாரிசாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கிறது. புதிய போக்கோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை பார்க்கலாம் வாங்க.

இது மட்டும் இருந்திருந்தால் இன்னும் நல்லா இருக்கும்

இது மட்டும் இருந்திருந்தால் இன்னும் நல்லா இருக்கும்

பல்வேறு அம்சங்கள் குறிப்பிடத்தக்க வகையில் இருந்தாலும் தற்போது அறிமுகமாகியுள்ள Poco M5 இல் 5ஜி ஆதரவு இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இது ரூ.10,000 விலைப் பிரிவு ஸ்மார்ட்போன் தான் எனவே 5ஜி இல்லையே என்று ஆச்சரியப்பட தேவையில்லை.

Poco M5 ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் அடுத்ததாக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Poco M5 விலை

Poco M5 விலை

Poco M5 ஸ்மார்ட்போனின் இந்திய விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்ற இரண்டு வேரியண்ட்களில் வெளியாகி உள்ளது.

இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.12,499 எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.14,499 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மூன்று வண்ண விருப்பங்களில் வெளியாகி உள்ளன. அது Poco Yellow, Icy Blue மற்றும் Power Black ஆகும்.

சலுகையோடு வாங்கலாம்

சலுகையோடு வாங்கலாம்

இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை செப்டம்பர் 13 முதல் தொடங்குகிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை செப்டம்பர் 13 நடக்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் தினத்தில் தொடங்குகிறது.

இந்த புதிய ஸ்மார்ட்போனுக்கு ஆரம்ப விற்பனை சலுகைகள் வழங்குவதாகவும் போக்கோ அறிவித்துள்ளது.

இந்த காலக்கட்டத்தில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டை ரூ.10,999 எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டை ரூ.12,999 எனவும் வாங்கலாம்.

எம்4 இல் இருக்கும் அம்சம் எம்5 இல் இல்லை

எம்4 இல் இருக்கும் அம்சம் எம்5 இல் இல்லை

போக்கோ எம்4 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட பதிப்பாக போக்கோ எம்5 இருக்கிறது. இருப்பினும் போக்கோ எம்4 ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவு உள்ளது எம்5 இல் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Poco M4 5G ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் வேரியண்ட் விலை ரூ.12,999 எனவும் 6 ஜிபி ரேம் வேரியண்ட் விலை ரூ.14,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Poco M5 சிறப்பம்சங்கள்

Poco M5 சிறப்பம்சங்கள்

Poco M4 5G மற்றும் Poco M5 ஸ்மார்ட்போனை ஒப்பிட்டு பார்க்கையில், இரண்டு ஸ்மார்ட்போன்களின் பின்பக்க கேமராக்கள் வடிவமைப்பிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.

முன் பேனலை பொறுத்தவரை அதே வாட்டர் டிராப் நாட்ச் வசதியோடு 8 எம்பி கேமரா இரண்டு ஸ்மார்ட்போனிலும் உள்ளது. டிஸ்ப்ளே ஆதரவுகள் ஒரே மாதிரி தான்.

6.58 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே

6.58 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே

90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடனான 6.58 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்கு என கார்னிங் கொரில்லா கிளாஸ் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் MediaTek Helio G99 SoC ஆதரவு இருக்கிறது. செயலற்ற சேமிப்பகத்தைப் பயன்படுத்தி ரேம் திறனை 2ஜிபி வரை நீடிக்கலாம்.

50 எம்பி பிரதான கேமரா

50 எம்பி பிரதான கேமரா

Poco Yellow மாறுபாட்டின் பின் பேனல் லெதர் ஃபினிஷ் அம்சத்தைக் கொண்டிருக்கிறது. பின்புற கேமரா அம்சங்களை பொறுத்தவரை, 50 எம்பி பிரதான கேமரா உட்பட டூயல் 2 எம்பி ஷூட்டர்கள் உள்ளது.

பட்ஜெட் விலைப் பிரிவு ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு இது உகந்த தேர்வாக இருக்கும்.

5,000mAh பேட்டரி உடன் 18W சார்ஜிங் ஆதரவு

5,000mAh பேட்டரி உடன் 18W சார்ஜிங் ஆதரவு

Poco M5 ஆனது 5,000mAh பேட்டரி உடன் 18W சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. டஸ்ட் மற்றும் வாட்டர் எதிர்ப்புக்கான IP52 மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளது.

Best Mobiles in India

English summary
Poco M5 Launched in India with triple rear Camera, 5000mAh Battery at Budget Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X