ஃபர்ஸ்ட் சேல்ஸ்லயே யோசிக்காம தூக்கிடனும்.! புது POCO M5 இன்று சலுகையுடன் விற்பனை.!

|

POCO நிறுவனம் தனது சமீபத்திய M சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலான POCO M5 என்ற புதிய மாடலை கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஸ்மார்ட்போன் POCO இன் முந்தைய POCO M4 பட்ஜெட் ஸ்மார்ட்போனிற்கு அடுத்ததாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய POCO M5 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று மதியம் துவங்குகிறது. அறிமுக விற்பனை என்பதனால், பல சலுகைகளுடன் இந்த சாதனத்தை கம்மி விலையில் வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

புதிய POCO M5 டிவைஸ் இன்று மதியம் விற்பனையா?

புதிய POCO M5 டிவைஸ் இன்று மதியம் விற்பனையா?

இந்த புதிய POCO M5 டிவைஸ் MediaTek இன் புதிய Helio G99 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்தியாவில் Infinix Note 12 Pro ஸ்மார்ட்போனிற்கு பிறகு MediaTek இலிருந்து இந்த புதிய சிப்செட்டை கொண்டிருக்கும் இரண்டாவது ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய POCO M5 இன்று இந்தியாவில் முதல் முறையாக இன்று மதியம் முதல் Flipkart வழியாகக் கிடைக்கும்.

POCO M5 விற்பனை மற்றும் விலை விவரங்கள்

POCO M5 விற்பனை மற்றும் விலை விவரங்கள்

இது முதல் விற்பனை மற்றும் பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்கு முன்னதாக வருவதால், டெபிட் கார்டு சலுகைகளுடன் சில சிறப்புத் தள்ளுபடிகளைப் பெறலாம். POCO M5 இன்று மதியம் 1 மணிக்கு Flipkart வழியாக விற்பனைக்கு வருகிறது. இந்த சாதனம் 4ஜிபி ரேம் + 64ஜிபி உடன் ரூ.12,499 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. அதேபோல், இதன் 6ஜிபி ரேம் +128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.14,999 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இத்துடன் உங்களுக்குப் பல சலுகைகளைக் கிடைக்கிறது.

உங்க போன் ஸ்லோவா இருக்கா? அடிக்கடி ஹேங் ஆகுதா? இதை செஞ்சா போன் ஸ்பீடு பிச்சுக்கும்.!உங்க போன் ஸ்லோவா இருக்கா? அடிக்கடி ஹேங் ஆகுதா? இதை செஞ்சா போன் ஸ்பீடு பிச்சுக்கும்.!

இந்த அறிமுக விற்பனையில் என்னென்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்?

இந்த அறிமுக விற்பனையில் என்னென்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்?

குறிப்பாக, ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி கார்டு பயனர்களுக்கு ரூ.1,500 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. Flipkart Axis Bank கோ-பிராண்டு கார்டு மீது 8% தள்ளுபடி கிடைக்கிறது. ஆக்சிஸ் பேங்க் டெபிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு EMI விருப்பம் மீது 10% தள்ளுபடி கிடைக்கிறது. இது ரூ 1,000 வரை பொருந்தும். ஐசிஐசிஐ வங்கியின் டெபிட் கார்டுகளுக்கு ரூ.1,000 வரை 10% தள்ளுபடி கிடைக்கிறது.

சலுகை லிஸ்ட் இன்னும் முடியல.. இருக்கு.!

சலுகை லிஸ்ட் இன்னும் முடியல.. இருக்கு.!

இலவச Disney+Hotstar மொபைல் பேக், கட்டணமில்லா EMI விருப்பங்கள் போன்ற பல சலுகைகளை இந்த முதல் விற்பனை உடன் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். சரி, இப்போது இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் என்ன என்பதைப் பார்க்கலாம். POCO M5 டிவைஸ் 6.58' இன்ச் IPS LCD முழு HD+ கொண்ட 90Hz டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது Widevine L1 ஆதரவுடன் வருகிறது.

FASTag பேலன்ஸை எப்படி SMS மூலம் அறிந்துகொள்வது? SBI பயனர்களுக்கு கிடைத்த புது வசதி.!FASTag பேலன்ஸை எப்படி SMS மூலம் அறிந்துகொள்வது? SBI பயனர்களுக்கு கிடைத்த புது வசதி.!

POCO M5 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

POCO M5 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

இந்த போன் MediaTek Helio G99 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது Arm Mali G57 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. POCO M5 ஆனது 6ஜிபி ரேம் வரை LPDDR4X ரேம் மற்றும் 128ஜிபி UFS 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்குகிறது. இந்த சாதனம் 50MP பிரைமரி கேமராவுடன், 2MP மேக்ரோ மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. முன்பக்கத்தில் 8MP செல்பி கேமரா உள்ளது.

பாஸ்ட் சார்ஜிங் உடன் பெரிய சைஸ் பேட்டரி

பாஸ்ட் சார்ஜிங் உடன் பெரிய சைஸ் பேட்டரி

இந்த போக்கோ எம்5 சாதனம் 5,000mAh பேட்டரி யூனிட்டை பேக் செய்கிறது. இது 18W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த பைக்விஸ் MIUI 13 இல் இயங்கும் Android 12 அவுட் ஆஃப் தி பாக்ஸ் இயங்குதளத்தில் இயங்குகிறது.இதுதவிர இதில் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக், கேம் டர்போ 5.0, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், டூயல்-பேண்ட் வைஃபை, 8.9 மிமீ தடிமன், ஐஆர் பிளாஸ்டர் மற்றும் புளூடூத் 5.3 ஆகியவை இருக்கிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
POCO M5 Budget Smartphone First Sale Starts At 1 PM Today Via Flipkart Launch Offers and Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X