Home
Mobile

அடிச்சி புடிச்சி ஆர்டர் போகுது! ரூ.8000 பட்ஜெட்டில் இந்த போனா? ஆளுக்கொன்னு வாங்க போறாங்க! எந்த மாடல்?

மீடியாடெக் ஹீலியோ சிப்செட், 50 எம்பி கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி போன்ற ரூ.15000 மதிப்புள்ள போன்களில் இருக்கும் அம்சங்களுடன் வெளியான போக்கோ எம்5 (POCO M5) போன் ரூ.8000 பட்ஜெட்டில் ஃபிளிப்கார்ட்டில் (Flipkart) விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த தள்ளுபடியை எப்படி பெறுவது? இந்த போக்கோ எம் 5 போனின் மற்ற அம்சங்கள் எப்படி இருக்கிறது? உள்ளிட்ட முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். ரூ.10 ஆயிரம் பட்ஜெட்டில் சிறந்த கேமரா, நல்ல பேட்டரி பேக்கப், தரமான சிப்செட் உள்ளிட்ட அனைத்து அம்சங்களுடன் ஒரு போனாக போக்கோ எம்5 வெளியாகி விற்பனையில் நல்ல வரவேற்பு பெற்றது.

அடிச்சி புடிச்சி ஆர்டர் போகுது! ரூ.8000 பட்ஜெட்டில் இந்த போனா?

போக்கோ எம் 5 அம்சங்கள் (POCO M5 Specifications): இந்த போக்கோ போன் 6.58 இன்ச் (2400*1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஐபிஎஸ் (IPS) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz சாம்பிளிங் ரேட் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) உடன் மீடியாடெக் ஹீலியோ ஜி99 எஸ்ஓசி (MediaTek Helio G99 SoC ) சிப்செட் வருகிறது. அதோடு மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது.

இந்த போக்கோ போன் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் + 2 எம்பி போர்ட்ராய்ட் லென்ஸ் + வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது.

பிளாக் (Black), கிரீன் (Green), யெல்லோவ் (Yellow) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது. லெதர் பினிஷிங் (Leather Finish) டிசைனில் அட்டகாசமாக உருவாக்கப்பட்டுள்ளது. சைடு மவுண்டென்ட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போக்கோ போன் ரூ.12,499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் ரூ.8,749ஆக விலை குறைக்கப்பட்டது.

இந்த விலையிலும் ஃபிளிப்கார்ட் தள்ளுபடி வழங்கி ரூ.8 ஆயிரத்துக்கும் குறைவான விலைக்கு விற்பனை செய்கிறது. அதாவது, ரூ.8,749 விலையுள்ள போக்கோ எம்5 4ஜி போனுக்கு ஐசிஐசிஐ வாங்கி கார்டுகளை பயன்படுத்தினால், ரூ.750 தள்ளுபடி வழங்குகிறது. இதன் மூலம் மலிவு விலையில் அதிகபட்ச அம்சங்களை கொண்ட போக்கோ போனை ரூ.7,999க்கு வாங்கிக்கொள்ள முடியும்.

ரூ.8000 பட்ஜெட்டில் சிறந்த போனை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த போக்கோ எம்5 போன் நல்ல தேர்வாக இருக்கும். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO M5 4G Phone Available On Flipkart Under Rs 8000 Should You Buy Here is Price, Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X