6.6-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்.!
சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வரும் நவம்பர் 9-ம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன என்றுதான் கூறவேண்டும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 6.6-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது போக்கோ எம்4 ப்ரோ 5ஜிஸ்மார்ட்போன்.

இந்த போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா-வைட் ஷூட்டர் இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இதன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். இதுதவிர செல்பீகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர தனித்துவமான கேமரா அம்சங்கள், எல்இடி பிளாஷ் உள்ளிட்ட ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம்.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட் வசதி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த சிப்செட் வசதி கேமிங் உட்பட பல்வேறு ஆப் வசதிகளை இயக்குவதற்கு மிக அருமையாக பயன்படும். அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். அதன்பின்பு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்கோ எம்4 ப்ரோ மாடலில் 5ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ்இஎன்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிகளவு விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications