Home
Mobile

6ஜிபி ரேம் உடன் வெளிவரும் அசத்தலான போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்.!

போக்கோ நிறுவனம் விரைவில் தனது புதிய போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும். குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கூட பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/28ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்ப ஆதரவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டைபயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மாடல் எண் 21091116AG என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி

இந்த புதிய போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity சிப்செட் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கூட கிடைக்கும்
என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்நிறுவனம்இதற்குமுன்பு அறிமுகம் செய்த போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி

இந்த போக்கோ எம்3 ப்ரோ 5ஜி சாதனத்தில் 6.5-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதி உள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால்வீடியோ, கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கும் மிக அருமையாக இருக்கும். அதேபோல் 1080x2400 பிக்சல் தீர்மானம்,90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பானஅம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்.

போக்கோ எம்3 ப்ரோ

போக்கோ எம்3 ப்ரோ ஸ்மார்ட்போனில் தரமான 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்தது. விரைவில் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ல் 4ஜிபி/6ஜிபி ரேம்

போக்கோ எம்3 ப்ரோ சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த சாதனம். போக்கோ எம்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்
+ 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

5000 எம்ஏஎச் பேட்டரி

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதேபோல் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு அசத்தலான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேபோல் 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்டிஇ, ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த
அசத்தலான போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco M4 Pro 5G will be introduced soon with 6GB of RAM: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X