Home
Mobile

விரைவில் அறிமுகமாகும் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்.!

போக்கோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிக வரவேற்பை பெறுகிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் போக்கோ நிறுவனம் விரைவில் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் அறிமுகமாகும் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்.!

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி
அதாவது இந்நிறுவனம் சமீபத்தில் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. மேலும் இந்த சாதனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே இதைதொடர்ந்து புதிய போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது போக்கோ நிறுவனம்.

மேலும் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி-இன் சான்றிதழ் விவரங்களை டிப்ஸ்டர் Kacper Skrzypek ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பின்பு டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் இந்தியாவில் வரவிருக்கும் போக்கோ ஸ்மார்ட்போனின் விவரங்களைப் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி வரவிருக்கும் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி மாடல் எண் 21091116AC என்று கூறப்படுகிறது.

விரைவில் அறிமுகமாகும் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்.!

குறிப்பாக விரைவில் வரும் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி சாதனம் ஆனது ஸ்னாப்டிராகன் அல்லது மீடியாடெக் சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி மாடல் வெளிவர வாய்ப்பு உள்ளது. அதேபோல் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போக்கோ எம்4 ப்ரோ 5ஜி சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போக்கோ நிறுவனம் இதற்குமுன்பு
அறிமுகம் செய்த போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

விரைவில் அறிமுகமாகும் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்.!

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 1080x2400 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு போன்ற சிறப்பான அம்சங்கள் இவற்றுள்ள அடக்கம். குறிப்பாக இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த போக்கோ எம்3 ப்ரோ சாதனத்தில் தரமான 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் போக்கோ எம்3 ப்ரோ சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என தரமான அம்சங்களை கொண்டுள்ளது போக்கோ எம்3 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு அசத்தலான அம்சங்கள் இவற்றுள்
அடக்கம்.

விரைவில் அறிமுகமாகும் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்.!

5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்டிஇ, ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு கொண்டுள்ளது இந்த போக்கோ எம்3 ப்ரோ 5ஜி மாடல்.

Best Mobiles in India

English summary
POCO M4 Pro 5G Series May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X