Home
Mobile

பிப்.2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் அசத்தலான போக்கோ எம்3 ஸ்மார்ட்போன்.!

போக்கோ நிறுவனம் வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி இந்தியாவில் புதிய போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதியை போக்கோ நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ
ட்விட்டர் அக்கவுண்ட் வழியாக உறுதிப்படுத்தியுள்ளது.

 பிப்ரவரி 2 ஆம் தேதி மதியம் 12

குறிப்பாக பிப்ரவரி 2 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் தளத்தில் அறிமுகமாகிறது இந்த போக்கோ எம்3 ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே ஐரோப்பிய சந்தையில் அறிமுகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஆனது 6.53-இன்ச்

போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080x2340 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

ட்ட ஆக்டோ-கோர்

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.

4ஜிபி/128ஜிபி உள்ளடக்க

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு இந்த போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

6000எம்ஏஎச் பேட்டரி

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்தியாவில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ரூ.11,035-விலையில் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco M3 with 48 Mega Pixel Camera Launching in India on February 2: Specifications, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X