Home
Mobile

முடியல குருநாதா இது மூன்றாவது முறை- மீண்டும் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் விலை உயர்வு: அப்படி என்ன இருக்கு?

இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் பல பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகிரிக்கப்பட்டது. அந்த பிராண்டுகளில் இதுவும் ஒன்றாகும். ரெட்மி நோட் 10 சமீபத்தில் நான்காவது உயர்வை பெற்றது. தற்போது போக்கோ இந்தியாவில் ஸ்மார்ட்போன் விலையை அதிகரித்த பிராண்ட்களின் பட்டியலில் இதுவும் இணைந்துள்ளது. போக்கோ எம்3 சாதனத்தின் விலை தற்போது மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.

போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன்

போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன்

போக்கோ எம் 3 சாதனத்தின் விலை முன்னதாகவே மூன்று முறை உயர்த்தப்பட்டன. அதன்படி தற்போது மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதையை மாறுபாடானது 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் மாடலுக்கு மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளன.

4 ஜிபி ரேம் வேரியண்ட் விலை

4 ஜிபி ரேம் வேரியண்ட் விலை

தற்போதைய 4 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.9,999 ஆகவும் எம்ஆர்பி விலை ரூ.10,499 ஆகவும் இருந்த நிலையில் தற்போது ரூ.10,999 ஆக இருக்கிறது. 6 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.11,999 ஆக இருக்கிறது. இது பிளிப்கார்ட் மற்றும் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர்களில் புதிய விலைகள் பிரதிபலிக்கின்றன.

6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

போக்கோ எம் 3 ரூ.10,000 விலைப்பிரிவில் கிடைக்கும் பிரபலமான சாதனங்களில் ஒன்றாகும். ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான எம்ஐயூஐ 12 ஃபார்ம்வேரை கொண்டுள்ளது. போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080x2340 பிக்சல் தீர்மானம், 19.5:9 என்ற திரைவிகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட்

ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட்

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும்ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு இந்த போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

48எம்பி பிரைமரி கேமரா

48எம்பி பிரைமரி கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

6000எம்ஏஎச் பேட்டரி

6000எம்ஏஎச் பேட்டரி

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 4ஜிபி ரேம் கொண்ட போக்கோ எம்3 மாடல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Poco M3 Smartphones Gets One more Price Hike in India: Specs, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X