விரைவில் தொடங்கப்படும் போக்கோ எம் 3 ப்ரோ: பிஐஎஸ் சான்றிதழ் வாங்கியாச்சு!

|

போக்கோ எம்3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிஐஎஸ் சான்றிதழைப் பெற்றுள்ளது. போக்கோ எம்3 ப்ரோ ஸ்மார்ட்போன் மறுபெயரிடப்பட்ட ரெட்மி நோட் 10 5ஜி பதிப்பாக ஆக இருக்கலாம். இந்த சாதனம் உலக சந்தைகளில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

விரைவில் தொடங்கப்படும் போக்கோ எம் 3 ப்ரோ:பிஐஎஸ் சான்றிதழ் வாங்கியாச்சு

போக்கோ எம்3 ப்ர இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்படுகிறது. காரணம் போக்கோ ஸ்மார்ட்போன் தற்போது பிஐஎஸ் சான்றிதழை பெற்றுள்ளது. போக்கோ எம்3 ப்ரோ உண்மையாகவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் இது இந்தியாவில் அதன் முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஃபெடரல் கம்யூனிகேஷன் கமிஷன் (எஃப்சிசி) தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் தோன்றியுள்ளது. போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது பிஐஎஸ் சான்றிதழில் M2103K19PI என்ற மாதிரி எண்ணுடனும் எஃப்சிசி சான்றிதழில் M2103K19PG என்ற மாதிரி எண்ணுடன் காணப்பட்டுள்ளது.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் சமீபத்தில் விற்பனை தொடங்கியது. போக்கோ எக்ஸ்3 ப்ரோ சாதனத்தின் விலை குறித்து பார்க்கையில், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.20,999-ஆக உள்ளது.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1080 x 2400 பிக்சல் தீர்மானம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சஙகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 7 என்எம் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர் உடன் அட்ரினோ 640 ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு அம்சங்களுக்கு அருமையாக செயல்படும் இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

5160 எம்ஏஎச் பேட்டரி புதிய போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5160 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், டூயல் ஸ்பீக்கர் ஆதரவு என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Poco M3 Pro 5G May Launching Soon in India: Gets BIS Certificate

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X