Home
Mobile

மே 19: 48எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி.!

போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ எம்3 ப்ரோ 5ஜி சாதனத்தை வரும் மே 19-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் கருப்பு, மஞ்சள் மற்றும் நீலம் போன்ற நிறங்களில் இந்த புதிய போக்கோ எம்3 ப்ரோ 5ஜி சாதனம் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் வெளிவந்த இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மே 19: 48எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி.!

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 20:9 என்ற திரைவிகிதம், 1080x2400 பிக்சல் தீர்மானம், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு
முக்கியமான அம்சங்களுடன் வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன்.

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் அதிகம் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்தவதற்கு மிகவும்அருமையாக இருக்கும். மேலும் MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 19: 48எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி.!

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த போக்கோ எம்3 ப்ரோ 5ஜி சாதனம்.

மே 19: 48எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி.!

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு அசத்தலான அம்சங்களுடன் இந்த போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்
வெளிவரும்.

5ஜி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Poco M3 Pro 5G with 48 Mega Pixel Camera Launching in India on May 19: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X