48எம்பி ரியர் கேமராவுடன் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?
போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக மூன்று ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது போக்கோ எம்3 ப்ரோ 5ஜி. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு
1080x2400 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

Dimensity 700 SoC சிப்செட் வசதி
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டைபயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

48எம்பி பிரைமரி கேமரா
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

5000 எம்ஏஎச் பேட்டரி
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி, ஏஐ பேஸ் அன்லாக் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

போக்கோ எம்3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ,IR blaster, வைஃபை, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்எப்சி, 4ஜி எல்டிஇ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 190 கிராம் என்று கூறப்படுகிறது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. குறிப்பாக பவர் பிளாக், கூல் ப்ளூ மற்றும் போக்கோ மஞ்சள் நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். வரும் ஜூன் 14-ம் தேதி அன்று பிளிப்கார்ட் தளத்தில் இந்த போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கும் வரும், அதுவும் முதல் விற்பனையின் போது ரூ.500 தள்ளுபடி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications