இன்று விற்பனைக்கு வரும் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்: விலை மற்றும் சலுகைகள்.!

|

போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இன்று பிளிப்கார்ட் வலைத்தளத்தில் மதியம் 12 மணி அளவில் விற்பனைக்கு கொண்டுவருகிறது. குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சாதனத்தின் முதல் விற்பனை என்பதால் ரூ.13,499-விலையில் வாங்க முடியும். அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்3 ப்ரோ 5ஜி மாடலின் விலை ரூ.15,999-ஆக உள்ளது, ஆனால் இந்த சாதனத்திற்கு ரூ.500 விலைகுறைக்கப்பட்டு ரூ.15,499-விலையில் வாங்க கிடைக்கும்.

6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.பின்பு 1080x2400 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு
முக்கியமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ரூ.205 கோடிக்கு ஏலம் போன டிக்கெட்: ஜெஃப் பெசோஸ் உடன் இவரும் விண்வெளி செல்கிறார்!ரூ.205 கோடிக்கு ஏலம் போன டிக்கெட்: ஜெஃப் பெசோஸ் உடன் இவரும் விண்வெளி செல்கிறார்!

Dimensity 700 SoC சிப்செட்

Dimensity 700 SoC சிப்செட்

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் அதிகம் எதிர்பார்த்த 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்தவதற்கு மிகவும்அருமையாக இருக்கும். மேலும்MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்கொடுக்கப்பட்டுள்ளது.

48எம்பி பிரைமரி சென்சார்

48எம்பி பிரைமரி சென்சார்

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த போக்கோ எம்3 ப்ரோ 5ஜி சாதனம்.

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

இந்த புதிய போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு அசத்தலான அம்சங்களுடன் இந்த
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

டூயல் 4ஜி வோல்டிஇ, ஐஆர்

5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்டிஇ, ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ்,யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். பவர் பிளாக், கூல் ப்ளூ மற்றும் போக்கோ மஞ்சள் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த போக்கோ எம்3 ப்ரோ 5ஜி மாடல்.

Best Mobiles in India

English summary
Poco M3 Pro 5G Sale Starts Today in India: Price, Offers and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X