Home
Mobile

அட்டகாசமான போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விவரங்கள்.!

போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் 48எம்பி ரியர் கேமரா, அசத்தலான சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை
கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.பின்பு 1080x2400 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

 Dimensity 700 SoC சிப்செட்

Dimensity 700 SoC சிப்செட்

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் அதிகம் எதிர்பார்த்த 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக்Dimensity 700 SoC சிப்செட் இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்தவதற்கு மிகவும்அருமையாக இருக்கும். மேலும்MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜிபி/6ஜிபி ரேம்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 8எம்பி செல்பீ கேமரா

8எம்பி செல்பீ கேமரா

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த போக்கோ எம்3 ப்ரோ 5ஜி சாதனம்.

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

இந்த புதிய போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு அசத்தலான அம்சங்களுடன் இந்த போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஆர் பிளாஸ்டர், என்எப்சி, 4ஜி எல்டி

5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்டிஇ, ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ்,யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். பவர் பிளாக், கூல் ப்ளூ மற்றும் போக்கோ மஞ்சள் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த போக்கோ எம்3 ப்ரோ 5ஜி மாடல்.

மரி கொண்ட

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்3 ப்ரோ 5ஜி மாடலின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.16,000-ஆக உள்ளது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்3 ப்ரோ 5ஜி மாடலின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.17,750-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Poco M3 Pro 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X