போக்கோ நிறுவனத்தின் முதல் 5 ஜி ஸ்மார்ட்போன் இது தான்.. வருகிறது புதிய போக்கோ எம் 3 புரோ 5 ஜி..

|

போக்கோ நிறுவனத்தின் முதல் 5 ஜி தொலைபேசியான போக்கோ எம் 3 புரோ 5 ஜி அறிமுகப்படுத்தப்பட்டதைப் போக்கோ இன்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தொலைபேசி ஜூன் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.

போக்கோ நிறுவனத்தின் முதல் 5 ஜி ஸ்மார்ட்போன் இது தான்..

போக்கோ எம் 3 ப்ரோ 5 ஜி பிளிப்கார்ட் வழியாக பிரத்தியேகமாகக் கிடைக்கும். இந்த தொலைபேசி சமீபத்தில் உலகளவில் வெளியிடப்பட்டது, இது சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 10 5 ஜியின் மறுபெயரிடப்பட்ட வேரியண்ட் ஆகும். போக்கோ எம் 3 புரோ 5 ஜி சாதனம் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாறுபாட்டிற்கான விலை யூரோ 179 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி இது தோராயமாக ரூ. 16,000 விலையாகும்.

போக்கோ எம் 3 ப்ரோவின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாட்டின் விலை யூரோ 199 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தோராயமாக ரூ .17,750 விலை ஆகும். இது பவர் பிளாக், கூல் ப்ளூ மற்றும் போக்கோ மஞ்சள் வண்ண விருப்பங்களில் வருகிறது. இதன் சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

POCO M3 Pro 5G விவரக்குறிப்புகள்
போக்கோ எம் 3 ப்ரோ 5 ஜி சாதனம் 6.5 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் உடன் 1080 x 2400 பிக்சல் கொண்ட எல்சிடி பேனலுடன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத பேனல், 500 நைட்ஸ் பீக் பிரகாசம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 2.2GHz ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் ஆல் இயக்கப்படுகிறது. இது 4 ஜிபி / 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை யுஎஃப்எஸ் 2.2 சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

போக்கோ எம் 3 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட எம்ஐயுஐ 12 இல் இயங்குகிறது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் கொண்ட கேமராவை கொண்டுள்ளது. இது 8 மெகாபிக்சலின் முன் கேமராவைக் கொண்டுள்ளது.

இணைப்பு விருப்பங்களில் 5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, இரட்டை 4 ஜி வோல்டிஇ, ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 4 ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Poco M3 Pro 5G confirmed to launch in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X