விரைவில் 6.53-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் POCO M3.!

|

போக்கோ நிறுவனம் விரைவில் இந்தியாவில் புதிய போக்கோ எம்3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஸ்மார்ட்போன் மாடல் ஏற்கனவே

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஏற்கனவே ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் போக்கோ எம்3 ஸ்மார்ட்போனன் ஆனது கருப்பு, மஞ்சள், நீலம் போன்ற போன்ற நிறங்களில் வெளிவரும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஆனது 6.53-இன்ச்

போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080x2340 பிக்சல்
தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

வாட்ஸ்அப் விடுங்க மக்களே: இனி Live Location கூகுள் மேப்ஸ் வழியாக அனுப்புங்க.! இதோ வழிமுறைகள்.!வாட்ஸ்அப் விடுங்க மக்களே: இனி Live Location கூகுள் மேப்ஸ் வழியாக அனுப்புங்க.! இதோ வழிமுறைகள்.!

எம்3 ஸ்மார்ட்போனில் மிகவும்

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி
இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

64ஜிபி/128ஜிபி உள்ளடக்க

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு இந்த போக்கோ எம்3 ஸ்மார்ட்போன்வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

48எம்பி பிரைமரி கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

 6000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மே

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்தியாவில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ரூ.11,035-விலையில் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது.

Best Mobiles in India

English summary
POCO M3 May Launching Soon in India: Here the Details!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X