45 நாளில் அரை மில்லியன் Poco M3 விற்பனை.. அப்படி என்ன இருக்கிறது இந்த போனில்?
போகோ எம் 3 இந்திய சந்தையில் கடுமையான வெற்றியைப் பெற்றுள்ளது. போகோ எம் 3 வெறும் 45 நாட்களில் அரை மில்லியன் அல்லது ஐந்து லட்சம் யூனிட்டுகளின் விற்பனையைக் கண்டதாக நிறுவனத்தின் வெளியிட்ட தகவல் தெரிவித்துள்ளது.

போக்கோ எம் 3
Poco அதன் முந்தைய விற்பனையின் முதல் நாளில் போக்கோ எம் 3 ஸ்மார்ட்போனை சுமார் 1.5 லட்சம் யூனிட்களை விற்பனையாகியது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு மேல், அதன் முதல் விற்பனையின் போது 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சாதனம் வாங்க தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர் என்பதும் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இந்த புதிய போக்கோ எம் 3 ஸ்மார்ட்போனிற்கு மவுசு கூடியுள்ளது.

மீண்டும் எல்லோவ் வேரியண்ட் விற்பனை
இந்த ஆண்டின் தொடக்கத்தில் போகோ மூன்றாவது பெரிய ஆன்லைன் ஸ்மார்ட்போன் பிராண்டாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய மகத்தான பதிலின் காரணமாக, ஹோலி பண்டிகைக்காக போகோ ஒரு சிறப்பு 'மஞ்சள்' வேரியண்ட் மாடலை விற்பனைக்கு அறிவித்துள்ளது. நிறுவனத்தின் வெளியீட்டின்படி, போக்கோவின் 'எல்லோவ்' அவதாரம் மார்ச் 29, 2021 அன்று பிளிப்கார்ட் வழியாக மீண்டும் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

போக்கோ எம் 3 சிறப்பம்சம்
- 6.53' இன்ச் எஃப்.எச்.டி + ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்பிளே
- வாட்டர் டிராப் நாட்ச் ஸ்டைல்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட்
- அட்ரினோ 610 ஜி.பீயுடன் 6ஜிபி ரேம்
- 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ்
- MIUI 12 உடன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
- ட்ரிபிள் கேமரா மைப்பு
- 48 மெகா பிக்சல் பிரைமரி சென்சார்
- 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார்
- 2 மெகா பிக்சல் மேக்ரோ லென்ஸ்
- 8 மெகா பிக்சல் செல்ஃபி ஷூட்டர்
- யூ.எஸ்.பி டைப்-சி
- 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6,000 எம்ஏஎச் பேட்டரி
- நிறம் : கூல் ப்ளூ (Cool Blue) , போக்கோ எல்லோ (Poco Yellow) மற்றும் பவர் பிளாக் (Power Black)

போகோ எம் 3 விலை
போகோ எம் 3 அதன் 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்டிற்கு ரூ .10,999 ஆகவும், 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டிற்கு ரூ .11,999 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இது தற்போது பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது, மேலும் சாதனத்தின் இரு வகைகளும் கையிருப்பில் உள்ளன. எஸ்பிஐ கிரெடிட் கார்டு சலுகைகளும் உள்ளன, இது 10% தள்ளுபடி 1,000 ரூபாய் வரை கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








