Home
Mobile

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.!

போக்கோ நிறுவனத்தின் போக்கோ எம்3 ஸ்மார்ட்போனுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்3 மாடலின் முந்தைய விலை ரூ.10,499-ஆக இருந்தது, தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.10,999-க்கு வாங்க கிடைக்கிறது.

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி

அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.12,999-விலையில் வாங்க கிடைக்கும். மேலும் இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது.

மார்ட்போன் ஆனது 6.53-

இந்த போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080x2340 பிக்சல் தீர்மானம், 19.5:9 என்ற திரைவிகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது போக்கோ எம்3.

கோ எம்3 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-

குறிப்பாக போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும்

அதேபோல் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு இந்த போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 எம்3 ஸ்மார்ட்போனின் பின்புறம்

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

6000எம்ஏஎச் பேட்டரி

மேலும் போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.பின்பு 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-

4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன் ஆனது அதிகமாக சூடாவதாக பயனர்கள்

போக்கோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன் ஆனது அதிகமாக சூடாவதாக பயனர்கள் புகாரளித்துள்ளனர். பின்பு போக்கோ நிறுவனம் இந்த சிக்கலை ஒப்புக் கொண்டுள்ளது என்றும், பின்பு விரைவில் இந்த பிரச்சனை சரி செய்யப்படும் என்றுஉறுதியளித்துள்ளது. அதாவது கேம் விளையாடும் போது இந்த சாதனம் சூடாவதாக பயனர்கள் புகாரளித்துள்ளனர். மேலும்
வரவிருக்கும் MIUI அப்டேட் உடன் இந்த புதிய சிக்கல் சரி செய்யப்படும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுளளது. இருந்தபோதிலும் சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த போக்கோ எஃப்3 ஜிடி ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Poco M3 Gets price hike again! Full details here: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X