முதல் நாள் விற்பனையில் 150,000 யூனிட்கள் விற்பனை.. அடுத்த போக்கோ எம் 3 விற்பனை எப்போது தெரியுமா?
போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 9ம் தேதி, அதாவது நேற்று அதன் முதல் விற்பனையைத் துவங்கியது. முதல் நாள் விற்பனையில் மட்டும் போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் சுமார் 150,000 யூனிட்களை விற்பனை செய்து புதிய மையில் கல்லை எட்டியுள்ளது என்று நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரே நாளில் 150,000 யூனிட்கள் விற்று முடியும் அளவிற்கு இந்த ஸ்மார்ட்போனில் என்ன உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம்.

போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் நேற்று அதன் முதல் விற்பனையை பிளிப்கார்ட் வழியாகத் துவங்கியது. விற்பனை துவங்கிய ஓர் நாளில் சுமார் 150,000 போக்கோ எம் 3 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது என்று நிறுவனம் தற்பொழுது தெரிவித்துள்ளது. பட்ஜெட் விலையில் அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் வெளியிடப்பட்ட இந்த புதிய ஸ்மார்ட்போனிற்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த மாதம் 2ம் தேதி இந்த புதிய போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் வெறும் ரூ. 10,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்பது உண்மை. இந்த ஸ்மார்ட்போன் கூல் ப்ளூ, போக்கோ எல்லோவ் மற்றும் பவர் பிளாக் வண்ணங்களில் வருகிறது.
அமோகமாக முதல் விற்பனையில் 150,000 யூனிட்களை விற்பனை செய்ததில் நிறுவனம் இப்பொழுது செம குஷியில் இருக்கிறது. இந்த புதிய போக்கோ எம் 3 ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை வரும் பிப்ரவரி 16ம் தேதி பிளிப்கார்ட் தளம் வழியாக நடைபெறும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் விரைந்து முந்திக்கொண்டாள் அடுத்த விற்பனையில் உங்கள் கைகளுக்கும் ஒரு போக்கோ எம் 3 கிடைக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications