Home
Mobile

4ஜிபி ரேம் உடன் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

போக்கோ நிறுவனம் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் புதிய போக்கோ எம்3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே 6ஜிபி ரேம் கொண்ட போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்பது
குறிப்பிடத்தக்கது.

ம் செய்யப்பட்ட 4ஜிபி ரேம்

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்3 மாடலின் விலை ரூ.10,499-ஆக உள்ளது.
பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்3 மாடலின் விலை ரூ.11,499-ஆக உள்ளது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும்128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்3 மாடலின் விலை ரூ.12,499ஆக உள்ளது.

போக்கோ எம்3 ஸ்மார்ட்போன்

போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080x2340 பிக்சல் தீர்மானம், 19.5:9 என்ற திரைவிகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோ

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும்ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

றும்

4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு இந்த போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

பின்புறம் 48எம்பி

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

 6000எம்ஏஎச்

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 4ஜிபி ரேம் கொண்ட போக்கோ எம்3 மாடல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Poco M3 4GB RAM Variant Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X